திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவரே இப்படியா.? சிக்கிய சிசிடிவி- தட்டித்தூக்கிய போலீஸ்

Published : Sep 06, 2025, 09:19 AM IST

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரின் நகை திருடு போன சம்பவம் தொடர்பாக, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், திருப்பத்தூர் மாவட்ட திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர் பாரதியை கைது செய்தனர். 

PREV
13
நகை திருட்டு - சிக்கிய சிசிடிவி

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களும், நகை திருட்டு சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக புகாரானது வந்த கொண்டுள்ளது. அந்த வகையில் போலீசாரும் குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். 

மேலும் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டும் வருகிறார்கள். இந்த நிலையில் திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சிசிடிவியின் காட்சியால் நகை திருட்டு வழக்கில் சிக்கியுள்ளார்.

23
பேருந்தில் நகை திருட்டு- சிக்கிய திமுக நிர்வாகி

கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி நெற்குன்றம் பகுதியை சேர்ந்த வரலட்சுமி(50) என்பவர் காஞ்சிபுரத்தில் இருந்து பேருந்தில் பயணம் செய்தவர், கோயம்பேடு பகுதியில் உள்ள வெங்காய மண்டி பேருந்து நிலையத்தில் இறங்கி வீட்டிற்கு சென்றுள்ளார். 

வீட்டிற்கு சென்று தான் கொண்டு வந்த பேக்கை திறந்து பார்த்த போது அதில் இருந்த 4 சவரன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிர்ச்சி அடைந்தவர் அருகில் உள்ள இடங்களில் தேடிப்பார்த்துள்ளார். ஆனால் தங்க நகை தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை.

33
பெண் ஊராட்சி மன்ற தலைவர் கைது

இதனையடுத்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் கோயம்பேடு பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் திமுக நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பாரதி வயது 56 என்பவர் நகையை எடுத்தது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து கோயம்பேடு போலீசாரால் பாரதி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பாரதி மீது வேலூர், ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 10 க்கும் மேற்பட்ட திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட பாரதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

Read more Photos on
click me!

Recommended Stories