ஒரே நாளில் ஷாக் கொடுத்த தக்காளி.! கொட்டிக்கிடக்கும் வெங்காயம் - ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா.?

Published : Sep 06, 2025, 08:21 AM IST

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி, வெங்காயம் உட்பட பல்வேறு காய்கறிகளின் விலை விவரங்கள் இங்கே. மழைப்பொழிவைப் பொறுத்து விலையில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
14
சமையலும் காய்கறிகளும்

சமையலையும் காய்கறியையும் பிரிக்க முடியாது. அந்த அளவிற்கு சமையலில் ஒன்றோடு ஒன்றாக கலந்து உள்ளது காய்கறிகள். எனவே காய்கறி சந்தைக்கு தினந்தோறும் லாரி லாரியாக மூட்டை மூட்டையாக தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட பச்சை காய்கறிகள் வருகிறது. எனவே தினந்தோறும் வரும் சரக்கை பொறுத்து விற்பனை விலையானது மாறுபடும். 

அந்த வகையில் மழை பெய்தால் விளைச்சல் பாதிக்கப்பட்டு குறைவான அளவே காய்கறிகள் வரும். எனவே பச்சை காய்கறிகள் அதிகளவு வந்தாலும் மக்கள் பை நிறைய வாங்கி செல்வது தக்காளி மற்றும் வெங்காயத்தை தான். அந்தளவிற்கு முக்கிய காய்கறிகளாக தக்காளியும் வெங்காயமும் உள்ளது.

24
காய்கறிகள் விலை என்ன.?

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 25 முதல் 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 250 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

34
குறைந்தது பச்சை காய்கறிகள் விலை

கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், 

மாங்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

44
தக்காளி வெங்காயம் விலை என்ன.?

அதே நேரம் பொதுமக்கள் அதிகளவு வாங்கிச்செல்லும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும். தக்காளி தரத்தை பொறுத்து ஒரு கிலோ 25 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 தக்காளி விலை சற்று அதிகரித்த நிலையில் வெங்காயத்தின் விலையானது சரிந்துள்ளது இதனால் இல்லத்தரசிகள் ஒரு கிலோவிற்கு 5 கிலோ வரை வெங்காயத்தை வாங்கி செல்கிறார்கள். தக்காளி 100 ரூபாய்க்கு 2அரை கிலோ முதல் 3 கிலோ வரை விற்பனை செய்யப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories