பின்னங்கால் பிடரியில் அடிக்க.. காங்கிரஸ் தலைவரை ஸ்கெட்ச் போட்டு மடக்கிய தொகுதி மக்கள்..!

Published : Dec 31, 2025, 12:33 PM IST

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வ பெருந்தகையை முற்றுகையிட்ட கோட்டூர் கிராம மக்களால் பரப்பரப்பு காரில் ஏறி உடனே செல்ல முயன்ற செல்வ பெருந்தகையின் காரை வழிமறித்து அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்ததால் பரபரப்பு.

PREV
13
முற்றுகையிடப்பட்ட காங்கிரஸ் தலைவர்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்டூர் கிராமத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவருமான செல்வப் பெருந்தகை அப்பகுதி மக்களை சந்திப்பதற்காக திங்கள் கிழமை இரவு சென்றிருந்தார்.

அப்போது அங்கு இருந்த மக்கள் எங்கள் பகுதியில் சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் சரிவர செய்து தரவில்லை எனக்கூறி ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்துகையை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

23
பொதுமக்கள் வாக்குவாதம்

உடனே சூழ்நிலையை அறிந்த சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை வேக வேகமாக காரில் ஏறி அங்கிருந்து செல்ல முற்பட்டார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் காரை சூழ்ந்து கொண்டு காரை முற்றுகையிட்டு சட்டமன்ற உறுப்பினரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக, நாலரை வருடங்களாக எங்களை நீங்கள் சந்திக்க வரவில்லை எங்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை நாங்கள் உங்களை எப்படி நம்புவது என கேள்விக்கணைகளால் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகையை திணறடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

33
எஸ்கேப்பான செல்வப்பெருந்தகை

உடனே அங்கு இருந்த ஒரு சிலர் காரை வழிமறித்து நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்களை விலக செய்து கார் செல்வதற்கான வழியை ஏற்படுத்தி செல்வபெருந்தகையை வழி அனுப்பி வைத்தனர். தப்பித்தோம் பிழைத்தோம் என செல்வப் பெருந்தகை கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் பறந்து சென்றார். மேலும் மக்களை சந்திக்க வந்த சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Read more Photos on
click me!

Recommended Stories