ஆவடி அருகே நெமிலிச்சேரி மேம்பாலத்தில் போதையில் இருந்த வடமாநில இளைஞர் ஒருவர் கேபிள் வழியாக கீழே இறங்க முயன்றார். அப்போது கேபிள் அறுந்து கீழே விழுந்த அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த பதைபதைக்க வைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையம் அருகே கஞ்சா போதையில் நான்கு சிறார்கள் வடமாநில இளைஞரை கத்தியால் கை, கால், தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சிறார்கள் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
23
60 அடி உயர மேம்பாலம்
இந்நிலையில் வடமாநில இளைஞர் ஒருவர் போதையில் கேபிள் வழியாக பாலத்தில் இருந்து இறங்க முயன்று கீழே விழுந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளது. மீஞ்சூரில் இருந்து வண்டலூர் செல்லும் சென்னை வெளிவட்ட சாலையில் முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அந்த வகையில் ஆவடி அருகே நெமிலிச்சேரி சந்திப்பில் உள்ள 60 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கொத்தாக கட்டப்பட்டிருந்த இன்டர்நெட் கேபிள்களை பிடித்து வடமாநில இளைஞர் ஒருவர் கீழே இறங்க முயன்றார். இதனை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக வாகன ஓட்டிகள் மற்றும் போலீசார் எச்சரித்தனர்.
33
எச்சரித்து அனுப்பிய போலீஸ்
இருந்த போதிலும் எதையும் காதில் வாங்காத அவர் சினிமா பாணியில் தனது கழுத்தில் இருந்த துண்டை எடுத்து கேபிளில் போட்டு சறுக்கி செல்ல திட்டமிட்டார். ஆனால் திடீரென கேபிள் ஒயர் அறுந்து கீழே விழுந்தார். ஆனால் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதனையடுத்து அவரை மீட்ட போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் ஓடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஷாருக் என்பதும் சரக்கு ஏற்றி வந்த லாரி ஒன்றில் சென்னை வந்ததும் தெரியவந்தது. மேலும் தலைக்கு ஏறிய போதையால் இது போன்று செய்தது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.