Pongal Holidays: 2026 ஜனவரி மாதத்தில் தமிழக பள்ளி மாணவர்களுக்கு சுமார் 15 நாட்கள் விடுமுறை வர வாய்ப்புள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் தொடர் விடுமுறையும், குடியரசு தினத்தை ஒட்டி 3 நாட்கள் விடுமுறையும் கிடைக்க உள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு தற்போது அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24ம் தேதி தொடங்கிய அரையாண்டு தேர்வு விடுமுறை வரும் 4ம் தேதியோடு நிறைவடைகிறது. எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை 12 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது. இதில், புத்தாண்டு விடுமுறை அடங்கும். 2026ம் ஆண்டுக்கான புதிய காலண்டரில் ஜனவரி மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகை எந்த கிழமையில் வருகிறது என இப்போதே காலண்டரை பள்ளி மாணவர்கள் புரட்டி வருகின்றனர்.
25
ஜனவரியில் 15 நாட்கள் விடுமுறை
இந்நிலையில் 31 நாட்கள் கொண்ட ஜனவரி மாதத்தில் 15 நாட்கள் விடுமுறை வருவதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கின்றனர். அதேநேரத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு எத்தனை நாட்கள் விடுமுறை வருகிறது என்பதை பார்ப்போம்.
35
பொங்கல் பண்டிகை விடுமுறை
அதாவது ஜனவரி 15 வியாழக்கிழமை தை பொங்கல், ஜனவரி 16 வெள்ளிக்கிழமை திருவள்ளுவர் தினம், ஜனவரி 17 சனிக்கிழமை உழவர் திருநாள் வருகிறது. ஜனவரி 18 ஞாயிற்றுக்கிழமை வந்துவிடுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாள் அதாவது ஜனவரி 14ம் தேதி புதன் கிழமை போகி என்பதால் அன்றைய தினம் ஒவ்வொரு ஆண்டும் அரசு விடுமுறை அளித்து வருகிறது. இந்த விடுமுறை அளிக்கும் பட்சத்தில் மொத்தம் 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
தொடர் விடுமுறை கிடைப்பதால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பணியாற்றி வருபவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு பொங்கல் பண்டிகை கொண்டாட இப்போதே திட்டமிட்டு வருகின்றனர்.
55
குடியரசு தினம் விடுமுறை
அதுமட்டுமல்லாமல் ஜனவரி 24 மற்றும் 25ம் தேதி வார விடுமுறையும் ஜனவரி 26ம் தேதி திங்கள் கிழமை குடியரசு தினமும் வருவதால் மொத்தம் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.