ஓபிஎஸ், டிடிவி, சசிகலா உடனே கட்சியில் சேர்த்துக் கொள்.! பிரஸ் மீட் வைத்து எடப்பாடியை மிரட்டும் செங்கோட்டையன்.!

Published : Sep 05, 2025, 11:34 AM IST

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியிலிருந்து வெளியேறியவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இல்லையெனில், ஒன்றிணைப்புக்கு ஆதரவானவர்கள் ஒன்று சேர்ந்து நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரித்துள்ளார்.

PREV
15

எடப்பாடி பழனிசாமியின் பிடிவாத குணத்தால் அதிமுக சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி தேர்தல்களில் தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் பிரிந்து கிடக்கும் அதிமுக ஒற்றிணைய வேண்டும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதே கோரிக்கையை அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

25

இந்நிலையில் கோபிச்செட்டிபாளையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கே.ஏ.செங்கோட்டையன்: ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவிற்கு பல்வேறு சோதனைகள் வந்தன. இயக்கம் உடைந்து விடக்கூடாது என்பதற்காக சசிகலாவை ஒரு மனதாக நியமித்தோம். முதல்வர் யார் என்ற நிலை வந்த போது எடப்பாடி பழனிச்சாமி சசிகலா தேர்வு செய்தார். அதன் பிறகு ஒவ்வொரு தடுமாற்றம் வரும்போதும் தடுமாற்றம் இல்லாமல் நான் செயல்பட்டு உள்ளேன். கடந்த காலத்தில் எனது செயல்பாடுகளை ஜெயலலிதா அவர்களே பாராட்டியது அனைவருக்கும் தெரிந்தது.

35

2017 ஆட்சியில் அமர்ந்த பிறகு 2019, 2021, 2024 தேர்தல்களை சந்திக்கும்போது களத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. 2024 பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 30 இடங்கள் வெற்றி பெற்று இருக்க முடியும். வேலுமணி கூட இதை ஒரு முறை வெளிப்படுத்தினார். அதன் பின் பொதுச்செயலாளரை சந்தித்து கழகம் தொய்வோடு இருப்பது எடுத்துரைத்தோம். கழகத்தை ஒன்றிணைக்கும் வெளியே சென்றவர்கள் மீண்டும் இணைக்கவும் கோரிக்கை வைத்தோம்.

45

ஒன்றிணைக்க நான், நத்தம் விசுவநாதன், வேலுமணி, தங்கமணி, அன்பழகன், சிவி சண்முகம் பொதுச்செயலாளர் சந்தித்தோம். ஆனால் அவர் ஏற்கும் மனநிலையில் இல்லை. வெளியே சென்றவர்களை அரவணைத்தால் தான் நம்மால் வெல்ல முடியும் என்பது எம்ஜிஆர் சொல்லிக் கொடுத்த பாடம். அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்கள் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள். அவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும். அவர்கள் அதிமுகவில் நிபந்தனையின்றி இணைந்து செயல்பட தயாராக இருக்கின்றனர்.

55

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற மனநிலையில் இருப்பவர்கள் ஒருங்கிணைந்து அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வோம். மேலும் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்றார்.

Read more Photos on
click me!

Recommended Stories