அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊர்வலம், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள கூடாதா.! கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஓபிஎஸ்

Published : Mar 08, 2025, 09:06 AM IST

அரசு ஊழியர் நடத்தை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதற்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்பது ஜனநாயக விரோதமானது என அவர் கூறியுள்ளார்.

PREV
15
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊர்வலம், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள கூடாதா.! கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஓபிஎஸ்

TN govt employee conduct rules : அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், அரசுக்கு வருவாயை ஈட்டித் தருவதிலும், மாணவ, மாணவியருக்கு கல்வியைப் போதிப்பதிலும் பெரும் பங்காற்றுபவர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே பாலமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்தான். இந்த நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நடத்தை விதிமுறைகள் திருத்தம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. அரசியல் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள கூடாது,

25
அரசு ஊழியர்களுக்கு கட்டுப்பாடு

25ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு அரசு ஊழியர்கள் சங்கங்களை கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜனநாயக நாட்டில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்துகின்ற உரிமை உண்டு. ஆனால், அந்தப் போராடுகின்ற உரிமையையும் பறிக்கின்ற அரசாக தி.மு.க. அரசு விளங்கி வருகிறது.

35
அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு வளாகங்களுக்குள் அறப் போராட்டம் நடத்துவதும், உண்ணாவிரதம் இருப்பதும், உரையாற்றுவதும் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. இது ஜனநாயகத்தின் ஓர் அங்கம். இந்த ஜனநாயக உரிமையை சிதைக்கும் வகையில், அரசு அலுவலக வளாகங்களிலோ, அதையொட்டியோ அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஊர்வலம் செல்லக்கூடாது,

கூட்டம் நடத்தக்கூடாது, உரையாற்றக்கூடாது என்ற வகையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளில் புதிய திருத்தங்களை தி.மு.க. அரசு மேற்கொண்டுள்ளதாக வந்துள்ள தகவல் பேரதிர்ச்சியை அளிக்கிறது. தி.மு.க. அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

45
போராடவே கூடாது என சொல்வதா.?

தி.மு.க. எதிர்க்கட்சியாக செயல்பட்டபோது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடத்திய போராட்டங்களில் அந்த இடத்திற்கே சென்று ஆதரவுக் கரம் நீட்டியவர் தற்போதைய முதலமைச்சர் அவர்கள். இதுபோன்று ஆதரவுக் கரம் நீட்டி, அவர்களின் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்தவுடன், அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாததோடு மட்டுமல்லாமல்,

அவர்களை போராடவேக் கூடாது என்று சொல்வது ஜனநாயக நடைமுறைக்கு எதிரரன செயல். அடக்கு முறையின் வெளிப்பாடு. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு வளாகங்களில் தான் போராட முடியுமே தவிர, வேறு இடங்களில் போராட முடியாது.

55
நடத்த விதி திருத்தங்களை திரும்ப பெறுக

இதுதான் காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறை. இந்த முறையை மாற்றுவது என்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உரிமையைப் பறிக்கும் செயலாகும். ஜனநாயகம் காக்கப்பட வேண்டுமென்ற எண்ணம் தி.மு.க. அரசுக்கு உண்மையாகவே இருக்குமானால், அண்மையில் தமிழ்நாடு அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளில் மேற்கொண்டுள்ள திருத்தங்கள் உடனடியாக திரும்பப் பெறப்படவேண்டுமென்று கேட்டுக்கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 
 

Read more Photos on
click me!

Recommended Stories