TNPSC, SSC, RRB போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு சந்தோஷமான செய்தி.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு

Published : Mar 08, 2025, 07:53 AM ISTUpdated : Mar 08, 2025, 07:57 AM IST

தமிழக அரசு TNPSC, SSC, IBPS, RRB தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கவுள்ளது. இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

PREV
15
TNPSC, SSC, RRB போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு சந்தோஷமான செய்தி.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு
FREE COACHING FOR TNPSC SSC RRB தமிழகத்தில் மட்டும் ஆண்டு தோறும் பள்ளிக்கல்வி, உயர்கல்வி முடித்து பல லட்சம் பேர் வேலை தேடி வெளியூர்களுக்கு செல்கிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திடும் வகையில் பல்வேறு தனியார் துறை மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகிறது. மேலும் சொந்த தொழில் செய்ய விரும்புபவர்களுக்காக இலவச பயிற்சியும் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் அரசு பணியே தங்களது கனவாக கொண்டு தேர்வுக்கு தயாராகுபவர்களுக்காகவும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. 


 

25
போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி

அந்த வகையில் TNPSC, SSC, IBPS, RRB போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், காளாஞ்சிப்பட்டி கிராமம். கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தில் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் 200 ஆர்வலர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

35
இணையவழி விண்ணப்பம் தொடக்கம்

மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் ஆர்வலர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று புதிதாக சேர்க்கை நடைபெற உள்ளதாகவும், பயிற்சி வகுப்புகள் முற்பகல் 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது என கூறப்ப்பட்டுள்ளது.  

எனவே பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் ஆர்வலர்கள் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01.01.2025 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

45
விண்ணப்பிக்க கடைசி தேதி

பயிற்சியில் சேர விரும்பும் ஆர்வலர்கள் போட்டித் தேர்வுகள் பயிற்சி மைய இணையதளம் www.cecc.in வாயிலாக 11.03.2025 முதல் 25.03.2025 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி, போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவும் தங்கும் வசதிகளும் இல்லையெனவும் கூடுதல் விவரங்களை  இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04553-291269 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

55
பயிற்சி வகுப்பு எப்போது.?

பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப தேர்வர்கள் தெரிவு செய்யப்பட்டு, ஆர்வலர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும். ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories