பத்திர பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்.! பதிவுத்துறை வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு

Published : Mar 08, 2025, 07:30 AM IST

மாசி மாத சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு பத்திரப்பதிவு செய்ய கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு 150 டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு 300 டோக்கன்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

PREV
14
பத்திர பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்.! பதிவுத்துறை வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு

Land registration tokens : ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் கனவாக இருப்பது சொந்தமாக வீடு, நிலம் வாங்க வேண்டும் என்பதே அதற்காக சிறுக, சிறுக பணம் சேர்த்து வங்கியில் லோன் போட்டு நிலம் அல்லது வீடு வாங்குவார்கள். அந்த வகையில் வாழ்நாள் முழுவதும் நம்முடன் இருக்கப்போகிற ஒரு பொருளை நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து வாங்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும். அந்த வகையில் சுப முகூர்த்த நாட்கள், விஷேச நாட்களில் பத்திர பதிவு அலுவலகத்தில் கூட்டம் அலைமோதும்.

24
சுபமுகூர்த்த நாளில் கூடுதல் டோக்கன்

இதனால் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் பெரும்பாலானோர் தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இந்த நிலையில் மாசி மாதத்தில் பத்திர பதிவு அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ய கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்வது வழக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

34
மார்ச் 10ஆம் தேதி கூடுதல் டோக்கன்

தற்போது மாசி மாதத்தின் மங்களகரமான தினமான வருகிற (10.03.2025) திங்கட்கிழமை  அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை ஏற்று மாசி மாதத்தின் சுபமுகூர்த்த தினமான 10.03.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 
 

44
தட்கல் டோக்கன் அதிகரிப்பு

 இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதுமட்டுமில்லாமல் ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது. 
 

Read more Photos on
click me!

Recommended Stories