தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சத்தியம் டிவி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் வருகின்ற 2026ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் கட்டதட்ட 8 மாதங்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக என இரு பிரதான கட்சிகளும் மக்களை சந்தித்து தங்கள் ஆதரவைக் கோரத் தொடங்கியுள்ளன. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் பல்வேறு போராட்டங்களைக் கடந்து அதிமுக.வின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பெரும்பாலான தேர்தல்களில் தோல்வியையே சந்தித்துள்ளது.
25
அதிமுக, பாஜக கூட்டணி
தனது ஆளுமையை நிலைநாட்ட வேண்டும் என்றால் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் பழனிசாமி இருப்பதால் தற்போதே மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற வாசகத்தோடு தமிழகம் முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இந்த தேர்தலில் அதிமுக, பாஜக.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் திமுக.வோ தனது பழைய கூட்டணி கட்சிகளுடன் மீண்டும் தேர்தலை எதிர்கொள்கிறது. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் நிலையில், தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எந்த கூட்டணியில் இணையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
35
தமிழக அரசின் திட்டங்கள்
மேலும் மகளிர் உரிமைத் தொகை, மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம், அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை என பல்வேறு சிறப்பானத் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ள திமுக, அதனை மக்களிடம் சரியான முறையில் பிரசாரம் செய்து மீண்டும் ஆட்சியைத் தொடர வேண்டும் என்ற கணக்கில் திமுக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சியான சத்தியம் டிவி தமிழகத்தில் கருத்துக் கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போதைய அரசியல் சூழலை மையமாக வைத்து நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பு அதிமுக, திமுக என இரு கட்சிகளின் அரசியல் கணக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் தொடர்பாக வெளியாகியுள்ள கருத்து கணிப்பு அதிமுக.வுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
55
டெல்டா மாவட்டங்களை கைப்பற்றும் ஸ்டாலின்
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், மயிலாடுதுறை உள்பட மொத்தமாக 46 தொகுதிகள் டெல்டா மண்டலத்தில் இடம்பெறுகின்றன. இவற்றில் மொத்தமாக 31 தொகுதிகளை திமுகவும், 8 தொகுதிகளை அதிமுகவும் கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாகவும், மீதம் உள்ள 8 தொகுதிகளில் இழுபறி ஏற்படும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தற்போது தான் டெல்டா மாவட்டங்களில் தனது பிரசாரத்தை மேற்கொண்டார். அப்படி இருந்தும் கூட டெல்டா தொகுதிகளில் திமுக.வுக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் அதிமுக.வுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.