அரியலூர் மாவட்டத்தில் ஆடி திருவாதிரையை முன்னிட்டு ஜூலை 23ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தும். ஈடுசெய்யும் விதமாக ஜூலை 26ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை என்றாலே குஷிதான். அதுவும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை 2025-26 கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டியை வெளியிட்டது. இந்த நாட்காட்டியின்படி, பள்ளிகள் மொத்தம் 210 வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை நாட்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 21 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
26
ஆடி மாதம்
இதனிடையே ஜூன் மாதம் பள்ளிகள் திறந்த நிலையில் தற்போது வரை மாணவர்களுக்கு வார விடுமுறையை தவிர்த்து கூடுதல் விடுமுறைகள் கிடைக்கவில்லை. அரசு விடுமுறைகள் இரண்டு நாட்கள் வந்தாலும் அதுவும் சனி, ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டதால் பள்ளி மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் ஆடி மாதம் பிறந்ததையொட்டி உள்ளூர் விடுமுறைகள் வரிசைக்கட்டி வருகிறது. ஏற்கனவே 28ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் மற்றும் 24ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆடி திருவாதிரையை முன்னிட்டு வரும் 23ம் தேதி அரியலூர் மாவட்டத்திற்கு விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
36
அரியலூர் மாவட்ட ஆட்சியர்
இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்: அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், குருவாலப்பர்கோவில் கிராமம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் யுனெஸ்கோவால் உலக பிரதான பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினை ஆண்டுதோறும் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மூலமாக அரசு விழாவாக நடத்திட அரசாணை ஆணையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கங்கைகொண்டசோழபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறவுள்ள ஆடி திருவாதிரை விழாவினை முன்னிட்டு, வருகிற ஜூலை 23ம் தேதி (புதன் கிழமை) அன்று அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளுர் விடுமுறை என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
56
அனைத்துக் கல்வி நிலையங்கள்
அரியலூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் இது பொருந்தும், இருப்பினும் இந்த உள்ளுர் விடுமுறையானது தமிழ்நாடு அரசு பள்ளித்தேர்வுத்துறை நடத்தும் பள்ளி இறுதி வகுப்பு அரசு தேர்வுகளுக்கு (மெட்ரிக், ஆங்கிலோ இண்டியன் பள்ளித்தேர்வுகள் உட்பட) பொருந்தாது.
66
பள்ளி வேலைநாள்
அவை ஏற்கனவே அரசால் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்ட நாளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூலை 26ம் தேதி சனிக்கிழமை முழுவேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையானது செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுர் விடுமுறை நாளில் அனைத்து சார்நிலை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு செயல்படும் என அறிவிக்கப்படுகிறது.