ராக்கெட் வேகத்தில் உயரும் வெங்காயம் விலை.! காய்கறி சந்தையிலேயே ஒரு கிலோ இவ்வளவா.?

First Published | Nov 18, 2024, 7:00 AM IST

சென்னையில் தக்காளி விலை குறைந்தாலும், வெங்காய விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அரசு விலை குறைப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும், பல இடங்களில் வெங்காயம் போதுமான அளவில் கிடைக்கவில்லை.

tomato onion

தக்காளி, வெங்காய விலை என்ன.?

சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் பல மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து விற்பனைக்காக சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் சமையலுக்கு முக்கிய தேவையாக கருதப்படும் பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியாகும். கடந்த மாதம் இந்த இரண்டு காய்கறிகளும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு விலை அதிகரித்தது.

ஒரு கிலோ 100 ரூபாயை தொட்டது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் அடுத்த சில நாட்களில் தக்காளி விலையானது சர்ரென குறைந்தது. 80 முதல் 100 ரூபாய் வரை விற்பனையான தக்காளி விலை தற்போது ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் வெங்காயத்தின் விலை மட்டும் உச்சத்தில் நீடிக்கிறது.

வெங்காய விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை

அந்த வகையில் நாடு முழுவதும் வெங்காய விலை அதிகரித்துள்ளதால் இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது அதன் படி மத்திய அரசின் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் இந்திய தேசிய விவசாய கூட்டுறவு சந்தைப்படுத்தும் கூட்டமைப்பு வெங்காயத்தை பல்வேறு மாநிலங்களுக்கு டன் கணக்கில் குறைந்த விலையில் விற்பனை செய்ய அனுப்பப்பட்டது.

அதன் படி சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மக்கள் கூடும் பகுதிகளில் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இருந்த போதும் பல மாவட்டங்களில் வெங்காயம் முழுமையாக சென்று சேராத காரணத்தால் விற்பனை விலை உச்சத்தை தொட்டது.

Tap to resize

Onion Farmer

காரிஃப் பயிர் வரத்து

இன்று ஒரு கிலோ பெரிய வெங்காயம் 70 முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தரம் குறைந்த வெங்காயம் 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் கிலோ கணக்கில் வாங்கி செல்லும் மக்கள் தற்போது குறைந்த அளவிலேயே வெங்காயத்தை வாங்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த வெங்காயம் விலையானது வரும் நாட்களில் குறையும் என மத்திய அரசின் நுகர்வோர் துறை தெரிவித்துள்ளது.  மீண்டும் காரிஃப் பயிர் வரத்து தொடங்கியுள்ளதாகவும் இதன் காரணமாக இனிவரும் நாட்களில் வெங்காய விலை குறையும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Vegetables Price Today


கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 85 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 15 முதல் 30 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது

vegetables

அதிகரித்த காய்கறி விலை

கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும்,  வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

Latest Videos

click me!