ரூ.3000 ஆசைப்பட்டு! தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட வள்ளியம்மாள்! நடந்தது என்ன?

Published : Nov 19, 2025, 01:26 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில், இயற்கை மரணம் அடைந்தவரின் ஈமச்சடங்கு நிதிக்காக ₹2000 லஞ்சம் பெற்ற சமூக நல பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் வள்ளியம்மாளை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர். 

PREV
13
தனி வட்டாட்சியர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த பெருமாள் மனைவி மலர். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இயற்கை மரணம் அடைந்துள்ளார். இயற்கை மரணம் அடைந்த ஈமச்சடங்குக்காக அரசு அறிவித்துள்ள 25 ஆயிரம் பணத்தை பெற பெருமாள் மகன் சேகர் என்பவர் நாட்றம்பள்ளி தனி வட்டாட்சியர் வள்ளியம்மாவிடம் மனு அளித்துள்ளார்.

23
ரசாயனம் தடவிய பணம்

அப்போது பணத்தை கொடுக்க சேகரிடம் சமூக நல பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் மூன்றாயிரம் பேரம் பேசியுள்ளார். அப்போது சேகர் 2000 ரூபாய் பணத்தை மட்டும் வள்ளியம்மாளிடம் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இது குறித்து திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராஜு மற்றும் ஆய்வாளர் கௌரி தலைமையிலான 5 பேர் குழுவினர் சேகரிடம் ரசாயனம் தடவிய பணத்தை லஞ்ச ஒழிப்பு துறையினர் கொடுத்த அனுப்பி உள்ளனர்.

33
லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது

அப்போது தனி வட்டாட்சியர் வள்ளியம்மாள் பணத்தை பெறும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். மேலும் இதன் காரணமாக சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வள்ளி மாலிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாட்றம்பள்ளி அருகே இயற்கை மரணம் அடைந்த நபருக்கு ஈமச்சடங்குக்காக 25 ஆயிரம் பணம் பெறுவதற்காக லஞ்சமாக 2000 ரூபாய் பணம் பெற்ற சமூக நலத்திட்ட பாதுகாப்பு தனி வட்டாட்சியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories