திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 24ல் தொடங்குகிறது. டிசம்பர் 3ம் தேதி மகாதீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட மலை சரிவு காரணமாக இந்த ஆண்டு மலை மீது பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆய்வு செய்த பின்னரே முடிவெடுக்கப்படும்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து, 10 நாட்கள் தீபத்திருவிழா சாமி வீதி உலா மற்றும் தேர் திருவிழா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் டிசம்பர் 3ம் தேதி மாலை ஏற்றப்படும். அன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2,688அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது.
24
மகா தீபம்
இந்நிலையில் மகா தீபத்தை தரிசிக்கவும், மலை மீது சென்று மகா தீபத்தை தரிசிக்கவும் ஆன்லைன் மூலமாக முன் பதிவு செய்ய வேண்டும். இதற்கு குறிப்பிட்ட அளவிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். நேற்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவிலில் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
34
அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை
இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், திருக்கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகம் துறை அமைச்சர் எ.வ.வேலு, திமுக எம்எல்ஏ பிச்சாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ. வேலு மற்றும் சேகர்பாபு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கடந்த 2024ம் ஆண்டு பெரிய மழை வந்ததால் ஈரப்பதம் அதிகமாகியது. அப்போது ஐஐடி நிபுணர்கள் வந்து மலையின் உறுதித்தன்மை குறைந்துவிட்டது. கொழ கொழ என்று மண்ணாகிவிட்டதால் பாறை இறங்கிவிட்டது என்றார்கள். இதனால் பாதுகாப்பு கருதி கடந்த ஆண்டு யாரையும் மலை மீது அனுமதிக்கவில்லை. எனக்கு தெரிந்து இந்த மலை சரிந்ததே இல்லை. கடந்த ஆண்டுதான் முதல்முறையாக சரிந்தது. ஆகையால் இந்த ஆண்டு கார்த்திகை தீபத்தின்போது உரிய ஆய்வு செய்த பிறகே மலை மீது பக்தர்களை அனுமதிப்பது குறித்து முடிவவெடுக்க முடியும் என தெரிவித்தார்.