அடி தூள்! டோட்டலாக மாறும் திருவண்ணாமலை! பக்தர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தெற்கு ரயில்வே!

Published : Jul 22, 2025, 05:38 PM IST

திருவண்ணாமலை ரயில் நிலையம் ரயில் முனையாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

PREV
14
Tiruvannamalai Railway Station To Be Upgraded As Railway Terminus

தமிழ்நாட்டின் ஆன்மிக நகரங்களில் ஒன்றாக விளங்கி வருவது திருவண்ணாமலை. இங்கு அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல லட்ச்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். அதுவும் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்து வருகின்றனர்.

24
ஆன்மிக நகரம் திருவண்ணாமலை

தினம்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பேருந்துகள், ரயில் மூலம் திருவண்ணாமலை வருகின்றனர். திருவண்ணாமலைக்கு பேருந்துகள் 24 மணி நேரமும் இருக்கும் நிலையில், ரயில் சேவை அந்த அளவுக்கு இல்லை. பவுர்ணமி கிரிவலத்தின்போது மட்டும் தெற்கு ரயில்வே சார்பில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் மேம்படுத்தி அங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என பக்தர்க்ள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

34
ரயில் முனையமாக மாறும் திருவண்ணாமலை

இந்நிலையில், பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தை "PFTR" முனையமாக (Passenger Facility Terminal) மாற்ற தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் "அம்ரித் பாரத்" திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 8.17 கோடி செலவில் திருவண்ணாமலை ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. திருவண்ணாமலை ரயில் நிலையத்தை ஒரு முனையமாக மாற்றுவதன் மூலம், இங்கிருந்து பிற நகரங்களுக்கும், மாநிலங்களுக்கும் புதிய ரயில்களை இயக்க முடியும். மேலும், ரயில்கள் திருவண்ணாமலையில் இருந்து புறப்படவும், அங்கு வந்து நிற்கவும் முடியும்.

44
டோட்டலாக ஹை டெக்காக மாறும் திருவண்ணாமலை

திருவண்ணாமலை கோயிலின் வடிவமைப்பில் ரயில் நிலையத்தின் முகப்பு அமைக்கப்பட உள்ளது. திருவண்ணாமலை ரயில் நிலையத்தின் நடைமேடைகள் இரண்டில் இருந்து ஐந்தாக உயர்த்தப்படும். புதிய டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு, டிஜிட்டல் டிஸ்பிளே போர்டுகள் பொருத்தப்படும். மேலும் பயணிகள் இருக்கைகள், குடிநீர் வசதி, கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். ரயில் நிலையம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்படும். ஒளி விளக்குகள் மேம்படுத்தப்பட்டு, பார்க்கிங் வசதியும் விரிவாக்கப்படும். மொத்தத்தில் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் போன்று திருவண்ணாமலை ரயில் நிலையமும் டோட்டலாக மாற உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories