திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தம்பதியினர் செய்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியடைந்தனர். கோயில் வளாகத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் இருவரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
உலக புகழ்பெற்ற கோவில் மட்டுமல்லாமல் நினைத்தாலே முக்தி தரக் கூடிய புண்ணிய தலமாகவும் பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்கக்கூடியது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இங்குள்ள 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் மாதம்தோறும் வரும் பவுர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையார் அருளை பெறுகின்றனர். இக்கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதுவும் தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்கள் வந்துவிட்டால் அண்ணாமலையாரை தரிசனம் செய்வதற்கே கிட்டத்தட்ட 3 மணிநேரம் ஆகிவிடும்.
24
அசைவ உணவு சாப்பிட்ட தம்பதி
இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவி லின் ஐந்தாம் பிரகாரத்தில் அமர்ந்து கொண்டு தம்பதியினர் அசைவ உணவு சாப்பிட்டிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்தர்கள் கோயில் வளாகத்தில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து இருவரையும் காவல் துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
34
காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை
புகாரின் பேரில் அசைவ உண்டதாக கூறப்படும் இருவரையும் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தம்பதியினர் ராமலிங்கனார் தெருவை சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது மனைவி என்பது தெரியவந்தது. மேலும் முட்டை குஷ்கா பார்ச்சல் வாங்கிக்கொண்டு கோபுரத்தின் உள்ளே வந்து ஐந்தாம் பிரகாரத்தில் அமர்ந்து சாப்பிட்டது தெரியவந்தது.
அண்ணாமலையார் கோவிலில் கிழக்கு திசையில் அமைந்துள்ள ராஜகோபுரம் மற்றும் வடக்கு திசையில் அமைந்துள்ள அம்மணி அம்மன் கோபுரம் ஆகிய இரண்டு நுழைவு வாயில்களில் வரக்கூடிய பக்தர்கள் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். கொண்டு செல்லும் பொருட்களும் பைகளும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படும். அப்படி இருக்கும் போது இந்த தம்பதியினர் பிரியாணியை எப்படி கொண்டு வந்தார்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இனி இதுபோன்று செய்யக்கூடாது என்று கூறி இருவரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.