Deepam Festivel: திருவண்ணாமலை மலை உச்சியில் நிலச்சரிவு? மகா தீபம் ஏற்றப்படுமா? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

First Published | Dec 4, 2024, 2:25 PM IST

திருவண்ணாமலையில் நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்த நிலையில், கார்த்திகை தீபத் திருவிழா திட்டமிட்டபடி நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்துள்ளார். 

Tiruvannamalai

நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இங்குள்ள 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் தினமும் பொதுமக்கள் கிரிவலம் செல்கின்றனர். குறிப்பாக  மாதம்தோறும் வரும் பவுர்ணமி தினத்தில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். 

Deepam Festivel

இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் நடைபெற்றது. ழாவின் முக்கிய நிகழ்வான டிசம்பர் 13ம் தேதி அதிகாலையில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் பரணி தீபமும்,  மாலையில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 

இதையும் படிங்க: பக்தர்களுக்கு முக்கிய செய்தி! திருவண்ணாமலை மகா தீபம் தரிசன டிக்கெட்! ஆன்லைனில் பெறுவது எப்படி?

Tap to resize

Tiruvannamalai landslide

இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால், அடுத்தடுத்து இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 5 குழந்தைகள் உள்பட 7 பேரும் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். இதனையடுத்து பெரும் சவால்களுக்கு இடையே 7 பேரின் உடல்கள் ஒரு வழியாக மீட்கப்பட்டது. 

Maha Deepam Festivel

நேற்று முன்தினம் அண்ணாமலை மலையின் தென்கிழக்கு பகுதியில் சுமார் ஆயிரம் அடி அளவிற்கு மழையின் உச்சியில் இருந்து பெரிய மண்சரிவு ஏற்பட்டது. இந்த இடம் வரும் 13ம் தேதி கார்த்திகை தீபம் ஏற்றவுள்ள முகப்பு என கூறப்படுகிறது. இதனால் தீபத்திருவிழா நடக்குமா? மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுமா? என்பது குறித்து பல கேள்விகள் எழுந்தன. இதற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார். 

Minister Sekar Babu

இதுகுறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்:  திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சேதம் இருந்தால் 2 நாட்களில் சரி செய்யப்படும்.  மகா தீபம் ஏற்பாடுகள் டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மீண்டும் ஆய்வு கூட்டம் நடத்தவுள்ளோம்.  திருவண்ணாமலைக்கு வரும் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் எந்தவித குறைபாடு இன்றி செய்து தரப்படும். நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆண்டு 40 லட்சத்துக்கு மேல் பக்தர்கள் கூடினாலும் வெற்றிக்கரமாக தீபத் திருவிழாவை நடத்துவோம் என அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

Latest Videos

click me!