Girivalam: அரசு விடுமுறை நாளில் பவுர்ணமி! கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்ன? கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

Published : Sep 14, 2024, 09:10 AM ISTUpdated : Sep 14, 2024, 09:18 AM IST

Tiruvannamalai Girivalam: புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை எதிர்பார்க்கப்படுவதால், தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 

PREV
14
Girivalam: அரசு விடுமுறை நாளில் பவுர்ணமி! கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்ன? கோவில் நிர்வாகம் அறிவிப்பு!
Tiruvannamalai

நினைத்தாலே முக்தி தரக் கூடிய சிறப்பான புண்ணிய தலமாக விளங்கக்கூடியது திருவண்ணாமலை. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்குகிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். இங்குள்ள 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் சுற்றுவட்டப்பாதையை மாதம்தோறும் வரும் பவுர்ணமி தினத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாய என்று உச்சரித்தப்படியே கிரிவலம் வருகின்றனர். 

24
Pournami Girivalam

குறிப்பாக ஆந்திரா, தெலங்கானாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை பவுர்ணமி தினத்தில் குவிந்து அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு அவரின் அருளை பெற்று செல்கின்றனர். மன குறையுடன் வந்து கிரிவலம் செல்பவர்களின் குறையை நிவர்த்தி செய்வதால் திரும்ப திரும்ப அண்ணாமலையாரை தரிசித்து பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் கிரிவலம் செல்பவர்களின் பசியை போக்கும் வகையில் பல்வேறு இடங்களில் அன்னதானம் மற்றும் குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த கிரிவலப்பாதையில்  இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்க என்னிட்ட அஷ்ட லிங்க சன்னதிகள் அமைந்துள்ளன. 

இதையும் படிங்க: Tiruvannamalai Girivalam Ashtalingam: தி-மலை கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கம்! அள்ளி கொடுக்கும் பலன்கள்!

34
Annamalaiyar Temple

இந்நிலையில் புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பவுர்ணமி வருகிற செப்டம்பர் 17-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11.27 மணிக்கு தொடங்கி மறுநாள் 18-ம் தேதி காலை 9.10 மணிக்கு முடிவடைகிறது. இந்த குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம். செப்டம்பர் 17-ம் தேதி மிலாடி நபி அரசு விடுமுறை என்பதால் அன்றைய தினம் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

44
Special Bus

இந்நிலையில், கிரிவலத்தில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவதையொட்டி தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 17-ம் தேதி 682 சிறப்பு பேருந்துகளும், 18-ம் தேதி (நாளை மறுநாள்) 502 சிறப்புப் பேருந்துகளும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சார்பில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Read more Photos on
click me!

Recommended Stories