Road Accident: சினிமா பாணியில் நடந்த பயங்கர விபத்து! 3 இளைஞர்கள் பலி! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!

Published : Sep 22, 2024, 12:02 PM ISTUpdated : Sep 22, 2024, 12:12 PM IST

Road Accident: ஆரணி அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

PREV
14
Road Accident: சினிமா பாணியில் நடந்த பயங்கர விபத்து! 3 இளைஞர்கள் பலி! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!
Accident

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அரியப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரண்ராஜ் மற்றும் ராஜேஷ்.  முள்ளிப்பட்டு ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த மணி. இவர்கள் 3 பேரும் நண்பர்கள். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். நேற்று புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்பதால் இவர்கள் மூவரும் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தனர். 

இதையும் படிங்க: School Holiday: மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை? பள்ளிகள் மீண்டும் எப்போது திறப்பு?

24
Bike Accident

பின்னர் ஆரணியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று விட்டு சினிமா பார்த்து இரவு 11 மணிக்கு மேல் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்ததனர். அப்போது ஆரணி தேசிய நெடுஞ்சாலை ஆற்றுப்பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் நேருக்கு நேர் மோதியுள்ளது. 

34
Police investigation

இதில், சினிமா பாணியில் தூக்கி வீசப்பட்ட மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய வாகனம் அங்கிருந்து நிற்காமல் சென்றுள்ளது. இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த 3 இளைஞர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க:  School Education Department: மாணவர்களின் எண்ணிக்கையில் மெகா மோசடி! அதிரடி முடிவு எடுத்த பள்ளிக் கல்வித்துறை!

44
CCTV Camera

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!

Recommended Stories