அதில், அண்ணாமலையார் கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மேலும், அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் உள்ளிட்ட அஷ்ட லிங்கத்தில் வைக்கப்பட்ட உண்டியல்கள் என அனைத்து எண்ணும் பணி சிசிடிவி கேமிரா மூலம் பதிவு செய்யப்பட்டது.