8 மாதம் இருக்கும்போதே ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக! அலறும் ஆளுங்கட்சி! குஷியில் இபிஎஸ்!

Published : Aug 16, 2025, 10:28 AM IST

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாகப் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் மநீம இணைந்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக, சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளது.

PREV
14

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் திமுக கடந்த தேர்தலை போல அதே கட்சிகளுடன் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. திமுக கூட்டணியில் புதுவரவாக மக்கள் நீதி மய்யமும் இணைந்துள்ளது. மேலும் ஒரு சில கட்சிகள் இணையலாம் என கூறப்படுகிறது.

24

அதேபோல் இனி எந்த தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறி வந்த நிலையில் டெல்லி சென்று வந்த கையோடு திடீரென பாஜகவுடன் கூட்டணி என்ற அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார். இதற்கு முக்கிய காரணம் மத்தியில் ஆளும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் சிபிஐ, அமலாகத்துறை மூலம் அசுர பலத்தில் இருக்கும் திமுகவுக்கு பல்வேறு வகையில் நெருக்கடியை கொடுக்கலாம் என்ற திட்டத்துடன் இபிஎஸ் இந்த முடிவு எடுத்தார்.

34

அதன்படி தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே பாஜக தனது அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதாவது சட்டவிரோதப் பணிப்பரிமாற்றம் தொடர்பாக வழக்கில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ. பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

44

அதேபோல் ஐ.பெரியசாமியின் மகனும் பழனி எம்.எல்.ஏவுமான ஐபி செந்தில் குமார் மற்றும் வள்ளலார் நகரில் உள்ள ஐ.பெரியசாமி மகள் இந்திரானி இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் செந்தில்குமாரின் எம்.எல்.ஏ விடுதி அறையிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சோதனை குறித்த தகவல் கிடைத்ததும், திமுகவினர் மற்றும் ஐ.பெரியசாமி ஆதரவாளர்கள் வீட்டின் முன்பாக குவிந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories