கோயில்களில் இனி இந்த ஒரு பொருளை கொண்டு செல்ல தடை- அறநிலையத்துறை அதிரடி

Published : Aug 16, 2025, 09:53 AM IST

தமிழகக் கோயில்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருவதால், 12 கோயில்கள் மாதிரி கோயில்களாகத் தேர்வு செய்யப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டு, இயற்கை சார்ந்த பொருட்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

PREV
15
கோயில்களில் பிளாஸ்டிக்

இந்தியாவிலேயே அதிகமான கோயில் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. எனவே தினந்தோறும் பல லட்சம் மக்கள் தமிழக கோயில்களில் தரிசன் செய்து வருகிறார்கள். அந்த வகையில் கோயிலுகளுக்குள் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.. இதனையடுத்து கோயில்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பிளாஸ்டிக் எளிதில் மக்காததால், நிலம், கடல் மற்றும் நீர்நிலைகளில் குவிந்து மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணையும் நீர்நிலைகளையும் மாசுபடுத்துகின்றன. விலங்குகளுக்கு பிளாஸ்டிக் ஆபத்தை ஏற்படுத்துகிறது. கோய

25
பிளாஸ்டிக் பொருட்களால் தீங்கு

அந்த வகையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு கடந்த 2019ஆம் ஆண்டு தடை விதித்து. அந்த வகையில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தடை மீறலுக்கு அபராதம் விதிக்கின்றன. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் அவ்வப்போது ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

ஆனால் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதில் பெரும் சவால் அமைந்துள்ளது. . இந்த நிலையில் பிளாஸ்டிக் பொருளுக்கு தடையுள்ள நிலையில் இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்த திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி,மயிலாப்பூர் கபாலீஸ்வரர் உட்பட 12 கோவில்கள் மாதிரி கோயிலாக தேர்வு செய்யபட்டுள்ளது. இங்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதோடு இயற்கை பொருட்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

35
கோயில்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் மற்றும் திருக்கோயில்கள் சுற்றியுள்ள பகுதிகளில் நெகிழி பயன்பாடு தடைவிதிக்கப்பட்டது நெகிழி பொருட்களுக்கு மாற்றாக இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்துதல் மாதிரி திருக்கோயில்களாக செயல்படுதல் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

திருக்கோயில்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நெகிழிப்பொருட்கள் பயன்படுத்த தடைவிதித்தும். நெகிழிப்பொருட்களுக்கு மாற்றாக இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழிப்பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

45
பிளாஸ்டிக் இல்லாத கோயில்

அந்த வகையில் நெகிழி இல்லா திருக்கோயில்களாக அறிவித்திட திருக்கோயில்களின் பட்டியல் அரசினால் கேட்கப்பட்டுள்ளது. இதன்படி கீழ்குறிப்பிட்டுள்ள திருக்கோயில்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

1 அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், மயிலாப்பூர். சென்னை

2. அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு

3 அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருத்தணி.

4 அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை

5 அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி.

55
பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

6 அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம்.

7 அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்.

8 அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம்.

9 அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம்.

10 அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை.

11 அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில், வடபழனி.

12 அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி.

எனவே, அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கைகளில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி திருக்கோயில்களில் நெகிழி பயன்பாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டதை சீரிய முறையில் செயல்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories