தமிழகத்தில் மழை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வந்தது. தற்போது மழையானது பெரும் அளவில் குறைந்துவிட்டது. மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை (12.09.2024 மற்றும் 13.09.2024) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
இதே போல 14.09.2024 முதல் 18.09.2024 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.