21 கேள்விகளை கேட்ட போலீஸ்
கட்சியின் கொடியில் யானை சின்னம் இடம்பெற்றிருப்பதற்கு தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் விஜய்யின் அரசியல் மாநாடு நடத்த தமிழகம் முழுவதும் இடம் தேர்வு நடைபெற்றது. இறுதியாக விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை செப்டம்பர் 23ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டு காவல்நிலையத்தில் அனுமதி கோரப்பட்டது.
இதனையடுத்து போலீசாரும் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். ஒரு சில நாட்களுக்கு பிறகு 21 கேள்விகள் கேட்கப்பட்டு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கு போலீசார் நோட்டீஸ் வழங்கினர். அதில் மாநாடு நடைபெறும் நேரம், மாநாடு நிகழ்சி நிரல், மாநாட்டில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை, வாகனத்தின் எண்ணிக்கை, உணவு மற்றும் தண்ணீர் தொடர்பான ஏற்பாடுகள். பாதுகாப்பு ஏற்பாடுகள், மின்சார வசதி, உள்ளிட்டவைகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.