School holiday
மாணவர்களுக்கு விடுமுறை கொண்டாட்டம்
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் கொண்டாட்ட மாதமாக அமைந்தது. அந்த வகையில் 10 முதல் 12 நாட்கள் விடுமுறை கிடைத்தது. குறிப்பாக சுதந்திர தின விழா, கிருஷ்ண ஜெயந்தி மற்றும் இடைப்பட்ட நாட்கள் விடுமுறை, வார விடுமுறை என 12 நாட்கள் கழிந்து 18 நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்பட்டது. இதன் காரணதாக மாணவர்கள் உற்சாகத்தில் இருந்தனர். பெற்றோர்களோடு வெளியூர்களுக்கும் சுற்றுலாவிற்கு பயணம் சென்றனர். இதே போல செப்டம்பர் மாதம் விடுமுறை கிடைக்குமா என காத்திருக்கும் மாணவர்களுக்கு சற்று ஆறுதல் தரும் மாதமாகவே செப்டம்பர் மாதம் உள்ளது. அந்த வகையில் மிலாது நபி விடுமுறை மற்றும் விநாயர் சதுர்த்தி விடுமுறையானது மாணவர்களுக்கு கிடைத்துள்ளது.
School Holiday
பள்ளி வேலை நாட்கள்
இதனிடையே கோடை விடுமுறைக்கு பின் பள்ளி தொடங்கும் போது தமிழகத்தில் பள்ளி வேலை நாட்களை பொறுத்தவரை 220 நாட்களாக அதிகரித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. 2024-25ம் கல்வியாண்டுக்கான நாள்காட்டியை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டிருந்தது. அதில் நடப்பு கல்வி ஆண்டில் மொத்த வேலை நாள் 210லிருந்து 220ஆக உயர்த்தப்பட்டிருந்தது. மேலும் அனைத்து சனிக்கிழமையில் பள்ளிகள் செயல்படும் என்ற ஷாக் உத்தரவும் கொடுக்கப்பட்டது.
ஆனால் இந்த உத்தரவிற்கு ஆசிரியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சனிக்கிழமைகளிலும் தொடர்ந்து பள்ளிகள் செயல்பட்டால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் என கூறப்பட்டது. இதனையடுத்து திருத்தப்பட்ட புதிய நாட்காட்டி வெளியிடப்பட்டது. அதன் படி, இந்த கல்வியாண்டுக்கான வேலை நாட்கள் 220லிருந்து 210ஆக குறைக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து காலாண்டு தேர்வுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது.
school holiday
ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்
அதன் படி தமிழகம் முழுவதும் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு 20ஆம் தேதி தொடங்கப்படும் என கூறப்பட்டது. அதன் படி அனைத்து மாணவர்களுக்கும் வருகிற 20ஆம் தேதி மொழிப்பாடம் தேர்வு நடத்தப்படவுள்ளது. இதனையடுத்து செப்டம்பர் 28ம் தேதி சனி முதல் காலாண்டு தேர்வு விடுமுறை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. வழக்கமாக ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை விடுமுறை கிடைக்கும். ஆனால் இந்தமுறை 5 நாட்கள் மட்டுமே விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
school holiday
தொடர் விடுமுறை அறிவிப்பு வெளியாகுமா.?
அதன்படி, செப்டம்பர் 28ம் முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி எனவே இந்த காலாண்டு விடுமுறையைய பொறுத்த வரை 3 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்தநிலையில் காலாண்டு விடுமுறை கிடைக்காவிட்டால் என்ன தொடர்ந்து 4 நாட்கள் மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதன் படி செப்டம்பர் 14ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை அரசு விடுமுறை, செப்டம்பர் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை, செப்டம்பர் 16ஆம் தேதி திங்கட் கிழமை மட்டும் பள்ளிகள் செயல்படும். செப்டம்பர் 17ஆம் தேதி மிலாது நபி அரசு விடுமுறை. இந்தநிலையில் ஏராளமான மக்கள் தொடர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கும் சுற்றுலாவிற்கும் பயணத்தை தொடங்கியுள்ளனர்.
school holiday
அரசு முடிவு என்ன.?
இதனிடையே வருகிற திங்கட்கிழமை அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அரசு ஊழியர்கள் சங்கம் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திங்கட்கிழமை விடுமுறைக்கு மாற்றாக மற்றொரு சனிக்கிழமை வேலை நாட்களாக அறிவிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
எனவே திங்கட்கிழமை விடுமுறை அறிவிப்பு வெளியிடுவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இருந்தாலும் தற்போதுள்ள நிலையில் திங்கட்கிழமை விடுவதற்கு வாய்ப்பு குறைவு என தகவல் வெளியாகியுள்ளது. பள்ளித்தேர்வு நடைபெற இருப்பதால் விடுமுறை அறிவிப்பிற்கு வாய்ப்பு குறைவாக இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.