Tamilnadu Government: மானியத்துடன் தமிழக அரசின் கடன் உதவி.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?

First Published | Sep 12, 2024, 1:59 PM IST

Tamilnadu Government: டாம்கோ மற்றும் டாப்செட்கோ மூலம் 8 இடங்களில் 3 நாட்கள் கடனுதவி முகாம் நடைபெற உள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பயன்பெறும் வகையில் தனிநபர் கடன், கல்விக்கடன், சுயஉதவிக் குழுக்கள் கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபடுகிறது.

theni

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் டாம்கோ மற்றும் டாப்செட்கோ கடனுதவி திட்டம் முகாம்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தேனியில் மாவட்டத்தில் நாளை உள்ளிட்ட 3 நாட்களுக்கு 8 இடங்களில் கடனுதவி வழங்கும் முகாம்கள் நடைபெற உள்ளது. 

இதுதொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சீர்மரபினர் மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் கடன் திட்டங்கள் வாயிலாக கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: TNPSC Group 4 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! என்னென்னு தெரியுமா?

Latest Videos


தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு கடன் திட்டங்களான தனிநபர் கடன் திட்டம், கல்விக்கடன் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், ஆட்டோகடன் திட்டம் ஆகிய  கடன் திட்டங்கள வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம், மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு கடன் திட்டங்களான தனிநபர் கடன் திட்டம், மகளிருக்கான புதிய பொற்கால கடன் திட்டம், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், மற்றும் கறவை மாடு கடன் திட்டம் ஆகிய  கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

மேலும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலம், கிறிஸ்தவர், முஸ்லிம், சீக்கியர், புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்விக்கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இதையும் படிங்க:  TN Government Holiday: 4 நாட்கள் தொடர் விடுமுறை! பொதுமக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!

மேற்கண்ட கடன் திட்டங்களின் கீழ் பயனாளிகள் பயன்பெற கடன் வழங்கும் முகாம்கள் நாளை மற்றும் செப்டம்பர் 20, 30 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்டத்தில் 8 இடங்களில் நடைபெறுகிறது. அல்லிநகரத்தில் உள்ள மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, பெரியகுளம் கூட்டுறவு நகர வங்கி, ஆண்டிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், போடியில் உள்ள மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, ராயப்பன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், சின்னமனூர் வெற்றிலை பயிரிடுவோர் கூட்டுறவு சங்கம், காமயகவுண்டன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், உத்தமபாளையம் நகர கூட்டுறவு வங்கி ஆகிய இடங்களில் இந்த முகாம் நடக்கிறது. 

கடன் பெற விரும்புபவர்கள் இந்த முகாம்களில் பங்கேற்று பயன்பெறலாம். முகாமில் பங்கேற்பவர்கள் தங்களின் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, சாதிச்சான்று, வருமானச்சான்று, தொழில் குறித்த விவரம் மற்றும் திட்ட அறிக்கை, கல்விக்கடன் பெறுவதற்கு பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல், உண்மைச்சான்றிதழ், கல்விக் கட்டணம் செலுத்திய ரசீது ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!