அதிமுக எம்.எல்.ஏ.வும், ஓபிஎஸ் தீவிர ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதிமுக பாஜகவின் கிளைக் கழகமாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன். அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட வெற்றி பெற்ற இவர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வருகை வந்த மனோஜ் பாண்டியன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து ஓபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
24
முதல்வர் மு.க.ஸ்டாலின்
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மனோஜ் பாண்டியன்: கொள்கைகளை பின்பற்றும் இயக்கமான திமுகவில் இணைந்துள்ளேன். தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதிமுகவை தோற்றுவித்த எம்ஜிஆரும், அதை பாதுகாத்த ஜெயலலிதாவும் எந்த சூழ்நிலையிலும் எந்த இயக்கத்துக்கும் அடகு வைக்கவில்லை. அதிமுக என்பது அவர்களது காலத்து அதிமுக இல்லை.
34
பாஜகவின் கிளை கழகமாக அதிமுக
இன்றைய அதிமுக வேறொரு இயக்கத்தை நம்பி அந்த இயக்கத்தின் சொல்படி தான் நடக்கக்கூடிய ஒரு துர்யாக்கியமான இருக்கிறது. எந்த கொள்கைக்காக அந்த இயக்கம் உருவாக்கப்பட்டதோ அதைக் காற்றில் பறக்கவிட்டு பாஜகவின் கிளை கழகமாக செயல்படுகிற சூழ்நிலை உள்ளது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறிவிட்டு எதன் அடிப்படையில் அவர்களுடன் இணைந்தார்கள். ஒவ்வொரு தொண்டனின் உழைப்பையும் வேண்டாம் என்று விரட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவை கூவத்தூர் பாணியில் கபளீகரம் செய்தவர்களுடன் எப்படி இருப்பது என்று சிந்தித்துதான் நான் திமுகவில் இணைந்துள்ளேன். திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன் இன்று மாலை 4 மணிக்கு தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.