விசாரணையில் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள கண்டிகை பகுதியை சேர்ந்த சங்கர் (46) என்பதும், சித்தூரில் டெக்ஸ்டைல்ஸ் கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. அவர் துணிகள் வாங்குவதற்காக ஈரோட்டுக்கு வந்ததும் தெரிந்தது. இதையடுத்து சங்கரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் ரயிலில் ஐடி ஊழியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.