ரயில் பயணத்தில் எவ்வளவு தங்கத்தை எடுத்துச் செல்லலாம்? விதிமுறைகள் என்ன சொல்கிறது.?

Published : Oct 09, 2025, 12:37 PM IST

தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ள நிலையில், ரயிலில் பயணிக்கும் போது எவ்வளவு தங்கத்தை கொண்டு செல்லலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில் இந்திய ரயில்களில் தங்கம் எடுத்துச் செல்வது லக்கேஜ் விதிகளுக்கு உட்பட்டது. 

PREV
15

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வருகிறது. ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை தொடும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக நடுத்தரவர்க்க மக்களுக்கு தங்கத்தை வாங்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தங்க நகைகளை ரயில்களில் எவ்வளவு எடுத்து செல்லலாம் என ரயில் பயணிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அந்த வகையில்  இந்திய ரயில்வே தங்கத்தை ஒரு சிறப்புப் பொருளாகக் கருதுவதில்லை. எனவே லக்கேஜாகவே கருதப்படுகிறது. 

25

உங்கள் டிக்கெட்டில் அனுமதிக்கப்பட்ட லக்கேஜ் வரம்பிற்குள் தங்கம் எடுத்துச் செல்லலாம்.

ரயில்வே ஒவ்வொரு வகுப்பு பயணிகளுக்கும் லக்கேஜ் வரம்பை நிர்ணயித்துள்ளது. அதன்படி:

* முதல் ஏசி: 70 கிலோ வரை.

* ஏசி 2-டயர்: 50 கிலோ வரை.

* ஏசி 3-டயர், ஸ்லீப்பர்: 40 கிலோ வரை.

* இரண்டாம் வகுப்பு: 35 கிலோ வரை.

35

எனவே ரிசர்வ் வங்கி (RBI) விதிகளின் படி, தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அல்லது உடலில் அணிந்திருக்கும் தங்கத்திற்கு குறிப்பிட்ட வரம்பு என எதுவும் இல்லை. ஆனால், தங்க நகைகள் வாங்கியதற்கான ரசீதுகள் உடன் கொண்டு செல்வது வரி தொடர்பான கேள்விகளைத் தவிர்க்க உதவும். மேலும் போலீசாரின் சந்தேகத்தை தீர்க்கவும் பெரும் உதவியாக ரசீதுகள் இருக்கும் . 

45

தங்கத்தின் விலை  ஒரு கிராம் 11ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. இதனால் செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவம் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே ரயிலில் தங்கம் எடுத்துச் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். தங்கத்தை எப்போதும் உங்கள் கைவசம் உள்ள பையில் வைத்துக் கொள்ளுங்கள். அதிக அளவு தங்கத்தை எடுத்துச் சென்றால், அதை ஒரே பையில் வைக்காமல் பிரித்து வையுங்கள்.

55

மொத்தத்தில், ரயிலில் தங்கம் எடுத்துச் செல்வது முற்றிலும் சட்டப்பூர்வமானது. ஆனால் அது உங்கள் லக்கேஜ் வரம்பிற்குள் இருக்க வேண்டும். மேலும் ரயில்வே குறிப்பிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றும். 

Read more Photos on
click me!

Recommended Stories