மெயின் லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் எனப்படும் மெமு ரயில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 3-ம் தேதி இயக்கப்பட்டது. 12 பெட்டிகள் கொண்ட, முன்பதிவு இல்லாத மெமு சிறப்பு ரயில் சென்னை மதுரை இடையே இயக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ரயில் சேவையை சென்னையில் இருந்து தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரை வரைக்கும், மதுரையில் இருந்து தேனி, நெல்லை, கன்னியாகுமரி வரை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தற்போது சோதனை அடிப்படையில் இயக்கப்படும் இந்த மெமு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.