அட பள்ளி மாணவர்களை விடுங்க! மே 9ம் தேதி விடுமுறை அறிவிப்பால் குஷியில் அரசு ஊழியர்கள்!

Published : May 06, 2025, 12:37 PM IST

வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டத்தையொட்டி மே 9ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
14
அட பள்ளி மாணவர்களை விடுங்க! மே 9ம் தேதி விடுமுறை அறிவிப்பால் குஷியில் அரசு ஊழியர்கள்!
School Holiday

அரசு விடுமுறை தவிர்த்து கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேகங்கள், மசூதி, தேவாலயங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி மே 9ம் தேதி விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

24
theni

தேனி மாவட்டம்  வீரபாண்டியில் அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. மதுரையை ஆண்ட வீரபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட இக்கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரிசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் 8 நாட்கள் வரை  வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். இதனை பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். 

34
theni

அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடி ஏற்றது தொடங்கி சித்திரை திருவிழா கோலகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு மே 9ம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

44
Central Government

ஏற்கனவே பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக  வேறொரு சனிக்கிழமை அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories