கொடநாடு கொலை கொள்ளை வழக்கு! விசாரணைக்கு ஆஜரான ஜெ. நிழல்! உண்மை வௌிவருமா?

Published : May 06, 2025, 11:59 AM ISTUpdated : May 06, 2025, 12:00 PM IST

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில்  பூங்குன்றன் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், முக்கிய குற்றவாளியான கனகராஜ் கார் விபத்தில் உயிரிழந்தார். சிபிசிஐடி போலீசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

PREV
15
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு! விசாரணைக்கு ஆஜரான ஜெ. நிழல்! உண்மை வௌிவருமா?
ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த பயங்கர கொள்ளை சம்பவத்தில் காவலாளி ஓம் பகதூர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். 

மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் பலத்த காயமடைந்தார். இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான கனகராஜ் கார் விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு தொடர்பாக முதலில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள். 

25
கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை

நீதிமன்ற நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, முக்கிய குற்றவாளியான கனகராஜின் சர்வதேச தொலைபேசி அழைப்பு விவரங்களை Interpol மூலம் பெறுவதற்கு CB-CID முயற்சித்து வருகிறார்கள். கடந்த 2017 ஏப்ரல் 23ஆம் தேதி சிறப்பு புலனாய்வுக் குழு இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது. குற்றவாளிகளின் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் மின்னணு சாதனங்களில் உள்ள தகவல்களை ஆய்வு செய்வதற்காக Interpol-இன் உதவியை நாடியுள்ளனர். மேலும், இவ்வழக்கில் கூடுதல் சாட்சிகளையும் விசாரிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

35
கொடநாடு- இறுதி கட்டத்தில் சிபிசிஐடி விசாரணை

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் வி.என். சுதாகரன் மற்றும் அவரது முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள், சயான் உள்ளிட்ட  பலரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு தீவிர விசாரணை மேற்கொண்டது.  அப்போது, பங்களாவில் இருந்ததாகக் கூறப்படும் கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் குறித்து அவர்களிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதுவரை இந்த வழக்கில் 250க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

45
விசாரணைக்கு ஆஜரான பூங்குன்றன்

இந்நிலையில், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த கணியன் பூங்குன்றன் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அவரிடம் பங்களாவில் கொள்ளை போன பொருட்கள் குறித்து விசாரணை நடைபெறலாம் என்றும் தெரிகிறது. ஜெயலலிதா இருந்தவரை எப்போதும் பரபரப்பாக காணப்பட்ட பூங்குன்றன், அவரது மறைவுக்குப் பிறகு அமைதியாக அரசியலிலிருந்தும் ஆட்சியாளர்களிடமிருந்தும் ஒதுங்கினார்.

55
பூங்குன்றனிடம் சிபிசிஐடிவிசாரணை

தற்போது தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து விவசாயம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பூங்குன்றனின் இந்த ஆஜர், கொடநாடு வழக்கில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளிவரலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories