முன்கூட்டியே வெளியாகிறது 12ம் வகுப்பு தேர்வு முடிவு.! வெளியான அதிகாரப்பூர்வ தேதி.? எப்படி பார்ப்பது?

Published : May 06, 2025, 11:23 AM ISTUpdated : May 06, 2025, 03:19 PM IST

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய இத்தேர்வின் முடிவுகளை tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.

PREV
14
முன்கூட்டியே வெளியாகிறது 12ம் வகுப்பு தேர்வு முடிவு.! வெளியான அதிகாரப்பூர்வ தேதி.? எப்படி பார்ப்பது?
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு

பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கு 12ஆம் வகுப்பு தேர்வு முக்கியமானதாகும். அந்த வகையில் 12ஆம் வகுப்பு தேர்விற்காக மாணவர்கள் இரவு பகலாக படிப்பார்கள். இதன் படி கடந்த கல்வி ஆண்டில் பொதுத்தேர்வில்  7ஆயிரத்து 518 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள்,

4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18, 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் எனமொத்தமாக  8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதினர்.  இந்த தேர்வானது கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. மேலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவானது மே மாதம் 9ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. 

24
விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு

இதனையடுத்து விடைத்தாள் திருத்தும் பணியானது பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வந்தது. இந்த பணியின் போதே மாணவர்களின் மதிப்பெண்கள் பதிவேற்றமும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. மேலும் மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணியும் கடந்த வாரத்தோடு முடிவடைந்தது. இந்த நிலையில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட காலதாமதம் ஆகும் என தகவலும்,

முன்கூட்டியே வெளியிடப்படும் என்ற தகவலவும் வெளியானது. இதன் காரணமாக மாணவர்கள் குழுப்பமான நிலை நீடித்து வந்தது. இந்த நிலையில் பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

34
முன் கூட்டியே வெளியாகும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

ஏற்கனவே மே மாதம் 9ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு நாள் முன்னதாக 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது. இதன் படி பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேல்நிலை இரண்டாமாண்டு(+2) பொதுத்தேர்வு முடிவுகளை வரும் 8ஆம் தேதி காலை 9 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிடுகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

44
தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி.?

12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in மற்றும் dge.tn.gov.in மூலம் பிறந்த தேதி மற்றும் பதிவு எண்ணை உள்ளிட்டு மாணவர்கள் TN HSC முடிவை 2025 சரிபார்த்துக்கொள்ளலாம். 

Read more Photos on
click me!

Recommended Stories