தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பாஜக அழைப்பு விடுத்ததாகவும், அதை மறுத்துவிட்டதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி தொடர்பாக தற்போதே பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்து வருகிறது. அந்த வகையில், அதிமுக- பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக அணியில் ஏற்கனவே இருந்த கட்சிகள் தொடர்கிறது. இந்த சூழ்நிலையில் அதிமுக- பாஜக கூட்டயில் புதிய கட்சிகளை இணைக்க காய் நகர்த்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பாஜகவில் இருந்து அழைப்பு வந்ததாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். வணிகர் தினத்தை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணி ஒருங்கிணைக்கும் தேர்தல் அங்கீகார வெற்றி விழா மாநாடு சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் நடைபெற்றது.
25
திருமாவளவனை தவறாக கணக்கு போடாதீர்கள்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பேசிய அவர், சாதியவாதிகளோடும் மதவாதிகளோடும் எந்தச் சூழலிலும் கைகோர்க்க மாட்டோம் இதை வெளிப்படையாக அறிவிக்கிறோம். துவக்க காலத்தில் கைகோர்ப்போம் என்றார்கள் கை கோர்த்தார்கள்,
பிறகு நமக்கு எதிராகவே தலித் அல்லாதோர் இயக்கத்தை ஆரம்பித்து என்னை கொலை செய்யும் அளவிற்கு வன்மத்தை பரப்பினார்கள். இதுவா அரசியல்? ஒருபோதும் அவர்களுடன் கைகோர்க்க மாட்டோம். சராசரி அரசியல்வாதியை போல் திருமாவளவனை கணக்கு போடாதீர்கள் அது எந்த காலத்திலும் நடக்காது.
35
பாரதிய ஜனதா தமிழ்நாட்டில் வேரூன்ற முடியாது
பாமகவை எதிர்ப்பதால் வன்னிய சமூகத்தை எதிர்ப்பதாக பொருள் இல்லை, எந்த காலத்திலும் வன்னிய சமூகத்திற்கு எதிரானவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் அல்ல திமுக அதிமுக என்ற இரு கட்சிகளும் வலுவாக இருந்தால் தான் பாரதிய ஜனதா தமிழ்நாட்டில் வேரூன்ற முடியாது.
ஜெயலலிதா இல்லாத காரணத்தை கொண்டு அதிமுக உடன் கூட்டணி வைத்து அதிமுகவின் வாக்குகளை பெற்று பாஜக வலிமையானதாக காட்டிக் கொள்ள முயல்கிறது. ஜெயலலிதா இல்லாமலேயே 66 எம்எல்ஏக்களை வென்றது அதிமுக பிறகு ஏன் பாஜகவை தோளில் சுமக்க வேண்டும். பாஜகவால் ஒரு தொகுதியில் ஆயிரம் ஓட்டு நிச்சயமாக வரும் என்பதை உறுதியாக உங்களால் சொல்ல முடியுமா?
ஆனால் பாஜக நிற்கும் தொகுதிகளில் வாங்கும் அத்தனை வாக்குகளும் இரட்டை இலைக்கு சொந்தமானது. இதன் மூலம் தமிழ்நாட்டில் நச்சு அரசியல் பரவும், மதவெறி அசியல் தலை தூக்கும். இதனை தயவு கூர்ந்து எண்ணிப் பார்க்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமிக்கு அறிவுரை கூறவில்லை ஆனால் அதிர்ச்சியை வெளிப்படுத்துகிறேன்.
பாஜகவுடன் கூட்டணி வைப்பதால் அதிமுக தனக்குத்தானே குழி பறித்துக் கொள்கிறது என்பதை உரிமையோடு சுட்டிக்காட்டுகிறேன். பாஜக அரசின் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஒருவர் என்னுடன் பேசினார்,
55
பாஜக கூட்டணியில் இணைய அழைப்பு- திருமாவளவன்
பாஜகவிற்கு அழைத்தார் அதெல்லாம் வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டு திரும்பி விட்டேன். மதசார்பற்ற கூட்டணியில் இடம்பெறுகிறோம் என்பதில் உறுதியாக இருக்கிறேன். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெல்ல வேண்டும், மு க ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்பதை விட சனாதன சக்திகள் எந்த சூழலிலும் வலிமை பெற்று விடக்கூடாது, பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விடுதலை சிறுத்தைகள் வீழ்த்தினார்கள் என்ற சாதனையை நாம் செய்ய வேண்டும் என திருமாவளவன் தெரிவித்தார்.