இந்நிலையில், கத்திரி வெயில் நாளை தொடங்கினாலும், ஒரு வாரத்துக்கு வெயிலின் தாக்கம் குறைவாகவே இருக்கும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கத்தரி வெயில் நாளை தொடங்கினாலும், மழை காரணமாக அடுத்த ஒரு வாரத்துக்கு வெயிலின் தாக்கம் குறைவாகவே இருக்கும். கடந்த 2024 ஏப்ரல் மாதத்தைப் போலல்லாமல், இந்தாண்டு ஏப்ரல் மாதம் தமிழகத்திற்கு மிகவும் நல்ல மாதமாக இருந்தது. அவ்வப்போது மழை பெய்தது.