அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் சம்பவங்கள் அடுத்தடுத்து வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் 3 பேர் பாலியல் வன்கொடுமை, மணப்பாறை மணப்பாரப்பட்டியில் தனியார் பள்ளி சிறுமிக்கு தாளாளர் உள்ளிட்டோர் பாலியல் துன்புறுத்தல், சேலம் அரசு பள்ளி மாணவிக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை, திருவள்ளூர் பள்ளிப்பட்டு அருகே 3ம் வகுப்பு மாணவிக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை, ஒசூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறியது.
25
tamilnadu government
பள்ளி மாணவிகள் மீதான பாலியல் சம்பவம்
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வந்தாலும் அவ்வப்போது சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை மாணவிகளின் நலன் கருதி முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்: கல்வி நிறுவனங்களில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு தேவையான அறிவுறுத்தல்களை ஏற்கனவே தமிழக அரசு வழங்கி இருக்கிறது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களை முழுமையான அளவில் 100 விழுக்காடு அளவிற்கு அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
35
CCTV Camera
கண்காணிப்பு கேமராக்கள் அவசியம்
குறிப்பாக, அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் பொருத்தப்பட வேண்டும். மாணவிகள் உள்ள இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார். மாணவிகள் பயணம் செய்யும் பேருந்துகளில் பெண் உதவியாளர்களே பணிபுரிய வேண்டும். விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கல்விச்சுற்றுலா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பெண் ஆசிரியர்களே மாணவிகளை அழைத்துச் செல்ல வேண்டும்.
பள்ளிகளில், அதிக அளவில் விழிப்புணர்வு பதாகைகள் முக்கியமான இடங்களில் வைக்கப்பட வேண்டும். இப்பதாகைகளில் Child Helpline 1098 மற்றும் பள்ளிக்கல்வித்துறை உதவி எண் 14417 ஆகிய உதவி எண்கள் குழந்தைகள் எளிதில் படிக்கும் வண்ணம் பெரிய எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டும். பள்ளிகளில் எவ்வித பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களும் நடைபெறக்கூடாது என அரசு உறுதியாக உள்ளது. விதிமுறைகளை செயல்முறைப்படுத்துவதில், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவித்திருந்தார்.
55
School Education Department
4 நாட்களுக்குள் இடைநீக்கம்
இந்நிலையில், மாணவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிக்கல்வித்துறை புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் மீது போக்சோ புகார்கள் பதிவு செய்யப்பட்டால் அவர்கள் 4 நாட்களுக்குள் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.