எமர்ஜென்சி சொல்லிட்டு விஜய்யை பார்க்கச்சென்ற காவலர்! வைரலான வீடியோ! ஆக்‌ஷனில் இறங்கிய ஆணையர்!

Published : May 03, 2025, 09:49 AM ISTUpdated : May 03, 2025, 09:55 AM IST

எமர்ஜென்சி பர்மிஷன் வாங்கிக்கொண்டு தவெக தலைவர் விஜயை பார்க்கச்சென்ற மதுரையைச் சேர்ந்த காவலர் கதிரவன் மார்க்ஸ் பணியிடைநீக்கம்.

PREV
13
எமர்ஜென்சி சொல்லிட்டு விஜய்யை பார்க்கச்சென்ற காவலர்! வைரலான வீடியோ! ஆக்‌ஷனில் இறங்கிய ஆணையர்!

மதுரை தெப்பக்குளம் குற்றப்பிரிவு காவலராக பணியாற்றி வருபவர் கதிரவன் மார்க்ஸ். விளக்குத்தூண் காவல் நிலையத்தில் மாற்று பணியில் இருந்தார். இவர் தீவிர விஜய் ரசிகர். நேற்று முன்தினம் மதியம் மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் சித்திரைத்திருவிழா பாதுகாப்பு பணி அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

23
tvk vijay

தவெக தலைவர் விஜய்யை வரவேற்ற காவலர்

இந்நிலையில் கொடைக்கானலில் நடக்கும் ஜனநாயகன் படப்பிடிப்பில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது எமர்ஜென்சி பர்மிஷன் சொல்லிவிட்டு விஜய்யை பார்ப்பதற்காக காவலர் சீருடை இல்லாமல் கட்சித் துண்டு, வேட்டி அணிந்துக்கொண்டு அவரை வரவேற்றுள்ளார். மேலும் மாலையும் அணிவித்து வழியனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. 

33
suspended

பணியிடை நீக்கம்

இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்த வீடியோ ஆணையர் லோகநாதனின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து கதிரவன் மார்க்ஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் காவல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories