அஜித் 40 வயதில் எடுத்த முடிவை... 70 வயதில் கனத்த இதயத்தோடு எடுத்த கமல்ஹாசன்!

First Published | Nov 11, 2024, 10:39 AM IST

தனது ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் தன்னை 'கமல்' அல்லது 'கமல்ஹாசன்' என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார். சினிமா எந்த ஒரு தனி மனிதனையும் விட பெரியது என்றும், தான் தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை கொண்டவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக நாயகன்

தமிழ் திரை உலகம் மட்டுமல்ல இந்திய திரை உலகை கலக்கி வருவபர் கமல்ஹாசன், களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் தொடங்கிய அவரது திரைத்துறை பயணம் தக் லைப் வரை சாதித்து வருகிறார். நூற்றுக்கணக்கான விருதுகளை வாங்கி குவித்துள்ளார். இந்தநிலையில் அரசியல் களத்தில் இறங்கியவர் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். இந்தநிலையில் தொண்டர்களுக்கு கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

kamalhasan

பட்டங்களால் மகிழ்ந்திருக்கிறேன்

என் மீது கொண்ட அன்பினால் 'உலக நாயகன்' உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து, சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன்; உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்துமிருக்கிறேன். உங்களின் பிரியத்தின் மீது எனக்கு மாறாத நன்றியுணர்வும் உண்டு என கூறியுள்ளார். 

Latest Videos


கலையை விடக் கலைஞன் பெரியவன் இல்லை

சினிமாக் கலை, எந்த ஒரு தனி மனிதனையும் விட பெரியது. அந்தக் கலையில் மேலும் மேலும் கற்றுக்கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன் தான் நான் என குறிப்பிட்டுள்ளார்.  பிற கலைகளைப் போலவே சினிமாவும் அனைவருக்குமானது; அனைவராலுமானது. திறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்துதான் சினிமா உருவாகிறது.

கலையை விடக் கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை உண்டு என தெரிவித்துள்ளார். கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை உழைத்துயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது. கொண்டு அதனால்தான் நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வர நேர்ந்ததாக தெரிவித்துள்ளார். அதன் படி மேலே குறிப்பிட்டது போன்ற பட்டங்களையும் அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதைக் குறைவும் வந்து விடாத வண்ணம் அவற்றைத் துறப்பது என்பதே அது.

kamal hasan

என்னை இப்படி அழைத்தால் போதும்

எனவே, என் மீது பிரியம் கொண்ட அனைவருக்குமாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும் ஊடக நண்பர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

இத்தனை காலமாக நீங்கள் என் மேல் காட்டி வரும் அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்கிறேன். சக மனிதன் என்கிற ஸ்தானத்திலிருந்தும், சினிமாவை நேசிக்கிற நம் அனைவரிலும் ஒருவனாகவே நான் இருக்க வேண்டும் என்கிற என் எண்ணத்தில் இருந்தும் இந்த வேண்டுகோள் வெளிப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என கமல்ஹாசன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

click me!