ஆசிரியர்களுக்கு குஷியான செய்தி.! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

First Published | Nov 11, 2024, 6:51 AM IST

மாணவர்களின் வளர்ச்சிக்கு ஆசிரியர்களின் பங்கு முக்கியமானதாகும். அந்த வகையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது 

school student

கல்வியில் ஆசிரியர்களின் பங்கு

தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள்  செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வியை போதிக்கும் ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பல பள்ளிகளில் மாணவர்கள் பாடங்களை சரியாக கற்றுக்கொள்ள முடியாத நிலை இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மாணவர்களின் வளர்ச்சிக்கு ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

school teacher

10ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிபணியிடம்

ஆனால் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் பணியிடங்கள் காலியாக இருப்பதால் மாணவர்களின் தேர்ச்சி விகிதிம் குறைவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் அரசுப் பள்ளிகளில் 5786 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 2000க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 2600க்கும் கூடுதலான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என ஒட்டுமொத்தமாக 10,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரம்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் தென் மாவட்டங்களை விட வட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாக புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.

Latest Videos


School Student

அமைச்சர் நேரில் ஆய்வு

தமிழகத்தில்  31,336 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 25.50 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  இந்த மாணவர்களுக்கு கல்வியை கற்பிக்க 1.07 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.  இதனிடையே தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரடியாக சென்று ஆய்வு செய்துவருகிறார். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகளில் உள்ள குறைபாடுகளை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

school students

இந்த மாதம் இறுதிக்குள் குட் நியூஸ்

மேலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனவும், குறிப்பாக, தொடக்கப்பள்ளிகளில் 98.8 சதவீதம் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளதாக தெரிவித்தார். எனவே  மாணவர்களின் தேவைக்கு ஏற்ப வரும் 2026 ஆம் ஆண்டிற்குள் 19ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவித்தார்.  உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள 3,192 ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளதாகவும் இந்த நவம்பர் மாதம் இறுதிக்குள் 3,000  ஆசிரியர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்குவார் என தெரிவித்தார். 

click me!