அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியுடன் முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான கே.ஏ. செங்கோட்டையன் கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. அந்த வகையில் 2025 பிப்ரவரியில் கோவையில் நடைபெற்ற அத்திக்கடவு-அவினாசி திட்ட பாராட்டு விழாவில், எடப்பாடி பழனிசாமி புகைப்படம் மட்டுமே இடம்பெற்றிருந்தது. எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் படங்கள் இடம்பெறாததை காரணம் காட்டி செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் தொடர்ந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தார். சட்டமன்றத்திலும் செங்கோட்டையன் தனித்து செயல்பட்டார்.