இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: 2025-2026ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தேர்வர்களும், (முதன் முறையாக அனைத்துப் பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள்) ஏற்கனவே 2012க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும் 01.09.2025 (திங்கள் கிழமை) முதல் 19.09.2025 (வெள்ளிக் கிழமை) வரை (விடுமுறை நாட்கள் நீங்கலாக) சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அலுவலகங்களை நேரில் அணுகி, பதிவுக்கட்டணமாக ரூ.125 செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவத்தினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். இது பயிற்சி வகுப்பிற்கான பதிவு மட்டுமே.