
மதுரை ஆதினம் சென்னைக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள காரில் வந்த போது குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் தன்னை கொலை செய்வதற்காக பின் தொடர்ந்து வந்து மோதிவிட்டு சென்றதாக பரபரப்பு புகார் கூறியிருந்தார். இதனையடுத்து சம்பவம் தொடர்பான காட்சியை போலீசார் வெளியிட்டனர். அதில் ஆதினத்தின் கார் வேகமாக சென்ற போது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து ஆதினத்தை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை ஆதினம் அவர்கள் ஒரு மதத்தின் மீது பழி போட்டு ஒரு தவறான பொய்யான குற்றச்சாட்டால் மதுரை ஆதினமடத்திற்க்கு மட்டுமல்ல திருஞானசம்பந்தர் பக்தர்களாகிய எங்களுக்கும் அவமானமாக உள்ளது.
இது போன்று பொய்யான கொலை முயற்சி குற்றச்சாட்டை ஒரு மதத்தின் மீது சம்பந்தமில்லாமல் கமத்தி குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்துவது மதுரை ஆதினமாக இருக்கும் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல காவல்துறை பாதுகாப்பிற்காகவோ அல்லது விளம்பர நோக்கத்திற்காகவோ மதுரை ஆதினத்தை பின்னால் இருந்து தவறாக யாரெனும் இயக்குவது போல் தெரிகிறது
மதுரை ஆதினத்திற்க்கு பின்னால் ஒரு சதிகார கூட்டமே இருக்கிறது. மதுரை ஆதினமாக பதவியேற்ற பின்பு மதுரை ஆதிமைடத்தில் தினந்தோறும் அன்னதானம் போன்ற கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றமாலும்,
ஆதின மடத்தை மின்சார சிக்கனம் என்று ஆதின மடத்தை இருளில் போடுவதும் மடத்திற்க்குள் யார் வருகிறார்கள் செல்கிறார்கள் என்று கண்காணிப்பு சிசிடிவி கேமராவை அணைத்து வைப்பதும், மதுரை ஆதினமாக பதவி நியமனம் செய்த திருவாவடுதுறை ஆதினத்தையும் தர்மபுர ஆதினத்தையும் கேவலமாக பேசுவதும் பிராமண சமூகத்தையும், அரச்சகர்களையும் அசிங்கமாக இழிவு படுத்தி பேசுவதும் மடத்திற்க்கு ஆசி வாங்க வரும் பக்தர்களை அவமரியாதை செய்வதும், மடத்தின் சொத்துக்களில் இருந்து வரும் வாடகை ஒத்திக்கு இருக்கும் நபர்களிடம் பாதகாணிக்கை என்ற பெயரில் லட்ச கணக்கில் வசூலிப்பதும்.
அரசியல்வாதிகளை போல் அடிக்கடி செய்தியாளர்களை சந்திப்பு மற்றும் பொது மேடையில் தான் தோன்றி தனமாக வாய்க்கு வந்த படி சர்ச்சையை உண்டாக்கும் வகையில் பேசுவதும், பிறகு அதனை மறுப்பதும் அமைச்சர் சேகர்பாபுவை சினேக் பாபு என்று நக்கலடித்து பேசுவதும் பிறகு சேகர்பாபும் நானும் நண்பர்கள் என்று கூறுவதும்,
மடத்திற்க்கு வருபவர்களை முன்னால் விட்டு பின்னால் அவர்களை தவறாக பேசுவதும், சித்திரை திருவிழா நடந்து கொண்டிருக்கின்ற இவ்வேலையில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் வீதி உலா வரும்பொழுது சிவனடியசிவ வாத்தியம் அடித்து விட்டு மடத்திற்க்குள் சிவனடியார்கள் கொண்டு வந்த உணவு சாப்பிட கூட அனுமதி மறுப்பதும்
மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் நடக்கும் திருவிழாவை காண வரும் பக்தர்களுக்கு ஒரு பச்ச தண்ணீர் கூட மடத்தின் சார்பாக கொடுக்க மறுப்பதும்.மதுரை ஆதின மடத்தை வணிக வளாகமாக மாற்றுவதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக மதுரை ஆதினத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பரவி வருகிறது.
மதுரை ஆதினமடத்தின் 293வது மடாதிபதியாக இருக்கும் ஒருவர் கூறும் குற்றச்சாட்டை சாதாரணமான விசயமாக எடுத்து கொள்ளாமல் வாகன விபத்து சம்பத்தமாக மதுரை ஆதினம் அவர்களையும் அவருடன் உடன் வந்தவர்களையும் வாகனத்தை உரசிய நபர்களையும் அழைத்து உரிய முறையில் விசாரித்து உண்மை நிலையை மக்கள் மத்தியில் தமிழக காவல்துறையும் தமிழக அரசும் தெளிவுபடுத்த வேண்டும்.
சமீபகாலமாக மதுரை ஆதினமடத்தை களங்கப்படுத்தும் விதமாகவும்.மடத்தின் புனிதத்தை அவமானப்படுத்தும் விதமாகவும் அவரது நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும் பார்க்கும் பொழுது மதுரை ஆதினம் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிய வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி மனநலம் பாதிக்கப்பட்டவரோ குற்றச்சாட்டுக்கு உள்ளானவரோ மதுரை ஆதினமாக இருக்க தகுதியற்றவர்.
எனவே மதுரை ஆதிவை த்திற்க்கு இந்து சமய வளர்ச்சிக்காகவும் இந்து சமயத்தை பாதுகாக்கவும். இந்து சமய ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்வதற்காகவும் மன்னர்கள், ஜமீன்தார்கள். செல்வந்தர்கள் என தானமாக கொடுத்த சுமார் 1000 கோடிக்கு மேல் இருக்கும் மதுரை ஆதினமடத்தின் சொத்துக்களையும், ஆதினமடத்தின் புகழையும் புனிதத்தையும் பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு
மதுரை ஆதின மரபுகளை மீறி தான்தோன்றி தனமாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் மதுரை ஆதினமாக செயல்படும் 293வது திருஞானசம்பந்த தேசிய பரமாச்சாரியராக மதுரை ஆதினமடத்தில் மடாதிபதியாக வகிக்க தகுதியற்றவர் அவரை உடனடியாக மதுரை ஆதினம் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டுமென விரைவில் இந்து மக்கள் கட்சி ஏற்பாட்டின் பேரில் அனைத்து இந்து அமைப்புகளையும், சைவ ஆதிணங்களையும் ஒன்றிணைத்து ஆலோசணை கூட்டம் நடைபெறும் என்பதை இந்த அறிக்கையின் மூலமாக தெரியபடுத்தி கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.