கோவை 'குடி'மகன்களுக்கு ராஜயோகம்! போதையில் மட்டையானால்..! போலீஸ் முக்கிய முடிவு!

Published : May 05, 2025, 03:55 PM ISTUpdated : May 05, 2025, 04:41 PM IST

கோவையில் அதிகமாக மதுகுடிப்பவர்களை டாக்சியில் வீட்டுக்கு அனுப்பி வைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம். 

PREV
14
கோவை 'குடி'மகன்களுக்கு ராஜயோகம்! போதையில் மட்டையானால்..! போலீஸ் முக்கிய முடிவு!
Coimbatore Police super decision to avoid accident

தமிழ்நாடு முழுவதும் முக்கிய வீதிகள்தோறும் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் அதிகரித்து வரும் நிலையில், மது குடிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மது குடிப்பவர்களால் அவர்களின் குடும்பம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி சாலை விபத்துகள் அதிகரித்து சமுதாயத்துக்கும் தீங்கு ஏற்பட்டு வருகிறது.

24
கோவையில் மது குடிப்பவர்களால் சாலை விபத்து

தமிழ்நாட்டின் 2வது பெரிய மாவட்டமான கோவையில் மொத்தம் 676 மதுக்கடைகள் உள்ளன. அனைத்து நாட்களிலும் இந்த டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. மது குடித்து செல்பவர்களால் கோவையில் தொடர்ந்து சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை  குடிபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தி 373 நபர்கள் உயிரிழந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அளவுக்கு அதிமாக மது குடித்து விட்டு நிதானமின்றி பைக்கில் செல்பவர்களாலும், அதிக போதையால் சாலையில் தள்ளாடுபவர்களாலும் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி விட்டது. குடிமகன்களால் சாலை விபத்து அதிகரித்து வருவது கோவை மாவட்ட காவல் துறைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்புக்குழு கூட்டம் நடந்தது.

34
கோவை போலீஸ் எடுத்த முடிவு

மாவட்ட ஆட்சியர், மாவட்ட கலால்துறை துணை கமிஷனர் மற்றும் போலீஸ் கமிஷனர் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு, மது குடித்துவிட்டு போதையில் இரு சக்கர வாகனங்களில் செல்வோரை கண்டறிந்து, தடுத்து நிறுத்தி குடிமகன்களை கால்டாக்சி வாயிலாக, வீடுகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கலாம் என போலீசார் முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

44
மாவட்ட ஆட்சியர் பச்சைக்கொடி

போலீசாரின் இந்த யோசனை குறித்து சற்று நேரம் யோசித்த மாவட்ட ஆட்சியர், ''கோவை மாவட்டத்தில், குடிகாரர்களால் விபத்துக்களின் எண்ணிக்கை உயரக்கூடாது; உயிரிழப்புகளும் ஏற்படக்கூடாது. அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம்'' என்று கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் கோவையில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் மாநகர போலீஸ் எல்லைக்குள் இருக்கும், அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பும் கண்காணிப்பு கேமரா பொருத்தி, அதை போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories