கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை புரட்டி எடுக்கப்போகுதாம்! வானிலை மையத்தின் அப்டேட்!

Published : Aug 14, 2025, 03:09 PM IST

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் தொடங்கியதில் இருந்து மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இன்று கோவை மற்றும் நீலகிரியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

PREV
15
கனமழை

தமிழகத்தில் ஜூலை மாதத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதற்கே அஞ்சு நடுங்கினர். இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் தொடங்கியதில் இருந்து வட மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. குறிப்பாக வெயில் குறைந்து ஊட்டியில் இருப்பது போல குளு குளுவென இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று கோவை மற்றும் நீலகிரியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

25
சென்னை வானிலை மையம்

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி. இன்று 08.30 மணி அளவில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஒரிசா -வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திரா பகுதிகளை கடக்கக் கூடும். தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

35
இடி, மின்னலுடன் மழை

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பள்ளது.

45
லேசானது முதல் மிதமான மழை

அதேபோல் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும். லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும் ஆகஸ்ட் 16 முதல் 20 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

55
சென்னை வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories