தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
24
Heavy Rain in Chennai
மேலும் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
34
Heavy Rain
21ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
44
School Leave
இந்நிலையில் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. காலை நேரத்திலும் கனமழை தொடர்வதால் புதுவையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.