Diwali Bonus: இன்ப அதிர்ச்சி! அரசு ஊழியர்களுக்கு ரூ.7000 தீபாவளி போனஸ் அறிவிப்பு!

First Published | Oct 18, 2024, 7:42 PM IST

Diwali Bonus: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி அரசு தனது ஊழியர்களுக்கு ரூ.7000 தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்பைப் பின்பற்றி, குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்படும்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி போனஸ் மத்திய, மாநில அரசு வழங்குவது வழக்கம். அதன்படி தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மத்திய மாநில அரசுகள் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் புதுச்சேரி அரசு தங்கள் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக 7000 ரூபாய் அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்காலிக போனஸ் கணக்கிடும் உச்சவரம்பை ரூ.7000 நிர்ணயித்து நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் சம்பள முறையைப் பின்பற்றும் புதுவை யூனியன் பிரதேச ஊழியர்களுக்கும், இந்த உத்தரவுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.


இதன்படி, புதுச்சேரி அரசில் பணிபுரியும் குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக 7000 ரூபாய் கிடைக்கும். மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்றி, புதுச்சேரி அரசின் நிதித் துறை சார்பு செயலர் சிவகுமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு நகலானது இன்று அனைத்து துறை செயலாளர்கள், துறை தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நேற்று முன்தினம் 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயர்த்திய நிலையில் தீபாவளி நெருங்கி வரும் நிலையில் தற்போது தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளது அரசு ஊழியர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos

click me!