School Holiday : பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! முதலமைச்சர் திடீர் உத்தரவு- என்ன காரணம் தெரியுமா.?

First Published | Sep 18, 2024, 6:02 AM IST

மின் கட்டண உயர்வை கண்டித்து இண்டியா கூட்டணி இன்று புதுச்சேரியில் பந்த் அறிவித்துள்ளது. இதனால், மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Puducherry

விடுமுறை மாணவர்கள் கொண்டாட்டம்

பள்ளிகளுக்கு விடுமுறை விட்டாலே மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான். அந்த வகையில் செப்டம்பர் மாதம் பொறுத்தவரை விநாயகர் சதூர்த்தி மற்றும் மிலாது நபி விடுமுறையானது விடப்பட்டது. இருந்த போதும் கூடுதல் விடுமுறை கிடைக்குமா மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக தேர்வானது கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்தநிலையில் மாணவர்களுக்கு மீண்டும் உற்சாகம் தரக்கூடிய வகையில் விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மின் கட்டண உயர்வு- பந்த் அறிவிப்பு

அந்தவகையில் புதுச்சேரியில் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக ஆண்டு தோறும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தாண்டும் மின்கட்டணம் உயர்வு இருக்காது என எதிர்பார்த்திருந்த புதுச்சேரி மக்களுக்கு ஷாக் தரக்கூடிய வகையில் அறிவிப்பானது வெளியானது.கடந்த ஏப்ரல் மாதம் மின் கட்டண உயர்வு தொடர்பாக  அறிவிக்கப்பட்டது. ஆனால் மக்களவை தேர்தல் காரணமாக கடந்த ஜூன் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.


Puducherry

மின் கட்டணம் உயர்வு எவ்வளவு தெரியுமா.?

வீடுகளுக்கு முதல் 100 யூனிட்டுக்கு 2.25 ரூபாய் மின்சாரக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது தற்போது ரூ.2.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.101 முதல் 200 வரை யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கான மின்கட்டணம் 3.25 ரூபாயில் இருந்து 4 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல மின் யூனிட்டிற்கு ஏற்ப மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. எலக்ட்ரீக் வாகனங்களுக்கான சார்ஜ் ஸ்டேஷன்களுக்கான மின்கட்டணம் முன்பு யூனிட்டிற்கு 5.33 ரூபாய் இருந்தது. இது 5.75 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதனால் புதுச்சேரி அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தது. 

school student

பேருந்துகள், கடைகள் இயங்காது

இதனையடுத்து புதுச்சேரி முழுவதும் இன்று பந்த் போராட்டத்திற்கு காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஒருங்கிணைந்த இண்டியா கூட்டணி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பந்த் தொடர்பாக பிரச்சாரம் செய்யப்பட்டது. குறிப்பாக மத்திய மற்றும் மாநில அரசுக்கு எதிராக எந்த கடைகளும் பேருந்துகளும் இயக்கப்படக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது. புதுச்சேரியில் பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் தனியார் வாகனங்கள் இயங்காது என கூறப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் நிலை ஏற்பட்டது.

School Education Department: இனி பள்ளிகளில் இவர்களை அனுமதிக்க கூடாது! அதுமட்டுமல்ல! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

school students holiday

பள்ளிகளுக்கு விடுமுறை- முதலமைச்சர் உத்தரவு

இதனையடுத்து புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளிகளும் விடுமுறை அறிவித்திருந்தனர். மேலும் பேருந்துகள் ஓடாது என அறிவித்திருந்த நிலையில் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்வது கேள்வி குறியை ஏற்படுத்தியிருந்த்து. இதனையடுத்து புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி  முதலமைச்சர்  ரங்கசாமி கூறுகையில், பந்த் போராட்டம் காரணமாக பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக  ஒன்றாம் வகுப்பு  முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளதாக தெரிவித்தார்

Latest Videos

click me!