புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்கள் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து கடந்த 1954ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது. இதனை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் விடுதலை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 2014 ம் ஆண்டு முதல் நவம்பர் 1ம் தேதியை புதுச்சேரி விடுதலை நாளாகவும், அரசு விடுமுறை தினமாகவும் மாநில அரசு அறிவித்தது. அதன்படி இந்த ஆண்டும் புதுச்சேரி மாநிலத்தின் அனைத்து பிராந்தியங்களிலும் விடுதலை தினம் கொண்டாடப்பட இருக்கிறது.