மகா சிவராத்திரி; புதுவை ஸ்ரீ தர்பானேஸ்வரர் ஆலயத்தில் நடிகர் யோகி பாபு வழிபாடு

First Published | Feb 18, 2023, 3:18 PM IST

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருள்மிகு ஸ்ரீ தர்பானேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்தார்.

ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெரும் ஜோதி வடிவாகிய இறைவன், உலகில் உள்ள உயிர்கள் இன்புற்று வாழ சிவலிங்கத் திருமேனியாக தோன்றிய நன்னாள் தான் மகா சிவராத்திரியாகும். பல்வேறு இடங்களில் பல்லாயிரம் பெயர்களைக் கொண்டு இறைவன் சிவலிங்கத் திருமேனியாக அருள்புரிகின்றான். 

இந்த நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு 7 மணிக்கு தொடங்கும் சிறப்பு யாக கால பூஜைகள் விடிய விடிய அதிகாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக 9 திரவியங்களால் சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடுகள் நடத்தப்படுகிறது. 
 

Tap to resize

இந்த நிலையில் காரைக்காலுக்கு வருகை புரிந்து இருந்த பிரபல நடிகர் யோகி பாபு காரைக்காலில் உள்ள ஸ்ரீ தர்பானேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. காரைக்காலில் தர்பானேஸ்வரர் ஆலயத்தில் யோகி பாபு சாமி தரிசனம் செய்கிறார் என்ற செய்தி வெளியானவுடன் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் கோவிலுக்கு முன் திரண்டனர்.

Latest Videos

click me!