லட்சுமியை மணக்குள விநாயகர் கோவில் யானை என்பதை விட, புதுவை மக்களின் செல்ல பிள்ளை என்றே சொல்லலாம். புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு தினம் தோறும் சாமி தரிசனம் செய்ய வரும் அனைவருமே... மறக்காமல் லட்சுமியை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கி செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அதே போல் லட்சுமியை தினமும் பார்த்து விட்டு அதற்க்கு வாழை பழம், அருகம்புல் போன்றவற்றை வாங்கி தருவதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர்.
இன்று காலை வழக்கம் போல்... தன்னுடைய பாகனுடன் நடை பயிற்சி மேற்கொண்ட லட்சுமி, கால்வே காலேஜ் பள்ளி அருகே திடீர் என நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தது. கடந்த 1995 ஆம் ஆண்டு, தன்னுடைய 5 வயதில், மணக்குள விநாயகர் கோவிலுக்கு வந்த லட்சுமி அன்று முதல் புதுவை மக்களின் செல்ல பிள்ளையாகவே மாறியது.
அனைவருடனும் அன்பாக பழகி, தன்னுடைய ஆசீர்வாதத்தை கொடுத்து வந்த லட்சுமி இன்று இல்லாமல் போனது... புதுவை மக்களை கண்ணீர் விட வைத்துள்ளது. லட்சுமியின் மறைவு ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கதறி வரும் அவர்கள், தங்கள் வீட்டில் ஒருவரை இழந்து விட்டது போல் உள்ளது என தெரிவித்து வருகிறார்கள்.
லட்சுமியின் மரணத்திற்கு வனத்துறையினர் சரியாக மருத்துவ பரிசோதனை செய்யாதது தான் காரணம் என கூறப்பட்டு வரும் நிலையில், உடற்கூறாய்வு செய்து என்ன காரணாம் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.